சத்துணவில் புழுக்கள்: புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சத்துணவில் புழுக்கள்: புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.




ஆண்டிப்பட்டி அருகே உள்ள பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் இந்து மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசின் சத்துணவு திட்டம் இந்த பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த பள்ளியில் சாம்பார் சாதம் நேற்று வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய ஆணையாளர் ஆண்டாள் மற்றும் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் பள்ளியில் வழங்கப்பட்ட சாதம் மற்றும் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விவரங்கள் கேட்டனர். இதைத்தவிர சத்துணவு சமைக்க பயன்படுத்தப்படுகிற அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் உணவுப்பொருட்களில் புழுக்கள் எதுவும் காணப்படவில்லை. ஆய்வு நடத்திய அதிகாரிகள் சத்துணவை சாப்பிட்டு பார்த்தனர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சோதனைக்காக எடுத்து சென்றனர். சத்துணவில் புழுக்கள் இருந்ததாக வலம் வரும் புகைப்படம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe Here