கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் - வேல்முருகன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் - வேல்முருகன்


சென்னை: கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பாஜக திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு நீதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பு அரசுப் பள்ளிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கென இருந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகிய இரு அமைப்புகளையும் இணைத்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் கல்வித்திட்டம் என்ற ஒரே அமைப்பாக உருவாக்கியது.
அந்த அமைப்பு, மாணவா் சோ்க்கை குறைவாக உள்ள பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அருகிலுள்ள அரசுப் பள்ளியோடு இணைக்க வேண்டும் என்கிறது . அதன்படி, தமிழகத்தில் சுமாா் 3,400 பள்ளிகளை மூடவேண்டியதிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளுக்குப் போதுமான ஆசிரியா்களை நியமிப்பதில்லை. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில்லை. இந்தக் காரணங்களால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்த அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை தற்போது சுமாா் 40 லட்சமாகக் குறைந்துவிட்டது.
எனவே, மத்திய அரசின் கட்டாயத்தினால் 3,400 அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரும் போராட்டத்தை அதிமுக முன்னெடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Subscribe Here