தமிழகத்தில் இன்று அதிக பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை பல்வேறு மாவட்டங்களில் பெய்ய உள்ள மழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட்
எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
திருச்சி, காஞ்சிபுரம், நெல்லை மாவட்டங்களில் மழையின் அளவு அதிகமாக பதிவாகியுள்ளது. நேற்று பெய்த தொடர் மழையால் சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஏரிகளின் கொள்ளளவானது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்த கன மழையால் தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மக்களை பாதுகாக்க 44 நிலையான மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளன. மேலும் அவசர பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ், ஜேசிபி,
பொக்லைன் ஆகியவை துரிதபடுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெரம்பூர், வில்லிவாக்கம், அடையாறு, மந்தைவெளி, டி நகர், கோயம்பேடு, அண்ணா நகர், பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அதே போல நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால்
இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மழை மீட்பு நடவடிக்கைகளை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
சூறாவளி காற்று வீசும் என்பதால் குமரி, மாலத்தீவு மீனவர்கள் கடல் பகுதிக்கு இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.