தற்பொழுது தமிழகத்தில் சிறப்பான செயல்பாட்டுடன் உள்ளது இந்நிலையில் சந்தையில் புதிய போட்டியாளர் உருவாகியுள்ளார்.டாடா அல்ட்ராஸ் கார்.
டாடா அல்ட்ராஸ் கார் ஃபர்ஸ்ட் ட்ரைவ் ரிவ்யூ இன்னும் ஒரு மாத காலத்தில் கார் விற்பனைக்கு வருவது, நாட்டிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45எக்ஸ் என்ற பெயரில் கான்செப்ட் காரை காட்சிக்கு கொண்டு வந்தது. அதை தொடர்ந்து இந்தாண்டு நடந்த ஜெனீவா மோட்டார் கண்காட்சியில், அதே கான்செப்ட் காரை தயாரிப்பு உகந்த மாடலாக, அல்ட்ராஸ் என்ற பெயரில் பொது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்தியாவிலும், விரைவிலேயே இந்த கார் விற்பனைக்கு வரும் என கூறியது. தற்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் மலரவுள்ள 2020 புத்தாண்டின் முதல் வரவாக அல்ட்ராஸ் கார் இந்திய சந்தையில் கால்பதிக்கவுள்ளது.
அதற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், நாட்டிலுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அல்ட்ராஸ் காருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆல்ஃபா பிளாட்பாரமின் தயாராகியுள்ள இந்த கார் ஹேட்ச்பேக் மாடலாகும்.
கட்டமைப்பு:
ஹாரியர் எஸ்யூவி மாடலை தொடர்ந்து, இம்பேக்ட் 2.0 டிசைனில்டாடா தயாரித்துள்ள இரண்டாவது கார் அல்ட்ராஸ். இது ப்ரீமியம் தரத்திலான வாகனம் என்பதால், இதனுடைய வடிவமைப்பு கூர்மையாகவும், கட்டமைப்பு திருத்தமாகவும் உள்ளன. மிகவும் ஸ்டைலான டிசனை பெற்றிருக்கும் இந்த ஹேட்ச்பேக் காரின் முன்பக்கத்தில் கூர்மையாகவும் கீழ்நோக்கி சாய்ந்த வகையிலான பானட் அமைந்துள்ளது.
சுறா மீனின் முகத்தை போன்று காட்சியளிக்கும் இதனுடைய முன்பகுதியில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குள் இடம்பெற்றுள்ளன.
சல்லடை வடிவிலான கருப்பு நிற கிரில் காருக்கு திருத்தமாக உள்ளது. அதன் இரண்டு பக்கவாட்டு பகுதியில் ஹெட்லேம்புகள் மற்றும் ஃபாக் விளக்குகள் உள்ளன. அதை சுற்றியும் மெல்லிய குரோம் பட்டை உள்ளது. அவற்றுக்கு நடுவில் டாடா மோட்டார்ஸின் முத்திரை இடம்பெற்றுள்ளது.
அவற்றுக்கு கீழ் எல்.இ.டி டி.ஆர்.எல் விளக்குகள் உள்ளன. இந்த காருக்கான ஏர் இன்டேக், பம்பரில் கீழ் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனுடைய பக்கவாட்டு பகுதிகள் ஸ்போர்ட்டியாகவுள்ளது. பெரிய வீல் ஆர்ச்சுகள் கொண்ட இந்த காருக்கு 16 அங்குல ஸ்டான்டர்டு டூயல் டோன் லேசர் கட் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்திற்கான கதவு கைப்பிடி வழக்கமான இடத்தில் உள்ளது. பின்பக்க பகுதிக்கான கதவுக் கைப்படி சி-பில்லருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் பக்கவாட்டு பகுதிக்கு ஸ்போர்ட்டியான தோற்றம் கிடைக்கிறது.
அல்ட்ராஸ் காரின் ரியர் பகுதியிலுள்ல டெயில் லைட்டுகள் உடனடி கவனடியாக கவனத்தை ஈர்க்கின்றன. மேலும், பின்பகுதியில் வழங்கப்பட்டுள்ள கருப்பு வண்ண தீம் கூடுதல் கவர்ச்சியை வழங்குகிறது. காரின் பின்பக்க வீண்டுஷீல்டுக்கு மேலே ஸ்பாய்லர் உள்ளது. சிறியளவில் காருடன் பொருந்திய வகையில் அது காட்சியளிக்கிறது.
ஒருங்கிணைந்த பிரேக்கிங் லைட்டுகள், பூட் லிட்டின் மத்திய பகுதியில் டாடா லோகோவுடன் கூடிய அல்ட்ராஸ் என எழுந்தப்பட்டுள்ளது. இவை தவிர, காரின் ரியர் பகுதியில் வேறு எங்கும் குரோம் வேலைபாடுகள் இடம்பெறவில்லை. காரின் ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றமும் பிரீமியம் டிசைன் அம்சங்களுடன் கவர்ச்சியாகவுள்ளது. மேலும் இந்த காரினுடைய நான்கு கதவுகளும் 90 டிகிரி ஓபனிங் வசதியை பெற்றுள்ளது.
உட்கட்டமைப்பு:
அல்ட்ராஸ் காருக்குள் ஏறி இறங்குவது எளிதாகவுள்ளது. காரின் உள்கட்டமைப்பில் மிகவும் ப்ரீமியம் தர வசதிகள் உள்ளன. காரின் டாஷ் போர்டை சிற்றிலும் பல்வேறும் ப்ரீமியம் தரத்திலான சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன
. இது போன்ற அம்சங்கள் டாடாவின் வேறு எந்த தயாரிப்பிலும் இடம்பெற்றதாக தெரியவில்லை.
உயர் ரக லெதர் இருக்கை கொண்ட இந்த காரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இரண்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த காரினுடைய ஸ்டீயரிங் சக்கரத்தில் ஆடியோ உள்ளிட்ட, வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கான கண்ட்ரோல்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் உள்ள செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில், அனலாக் ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர், ரேஞ்ச், எரிபொருள் அளவு உள்ளிட்ட கார் குறித்து வாகன ஓட்டுநருக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும்.
பயணிகளுக்கு நல்ல இடவசதியை வழங்கும் வகையில், அல்ட்ராஸ் கார் அகலமாக தயாரிக்கப்பட்டுள்ளன. காரிலுள்ள இருக்கைகள் அகலமாக உள்ளது. இதனால் பயணிகள் சவுகரியமாக அமர்ந்து பயணிக்கலாம். ஓட்டுநர் மற்றும் முன்பக்க பேசஜர் இருக்கையில் ஆர்ம்ரெஸ்டுகள் உள்ளன.
இடவசதி:
கேபினில் முன் மற்றும் பின் பகுதிகள் நல்ல இடவசதியுடன் இருப்பதால், முன்பக்கத்தில் அமர்ந்துள்ள பயணி தாராளமாக காலை நீட்டிக்கொள்ளலாம். எனினும், பின் பகுதியில் அமர்பவர்கள் சராசரி உயரத்தைக் காட்டிலும் உயரமாக இருந்தால், சவுகரியமாக பயணம் செய்வது சற்று கடினம். ஆனால் காரின் பின்பகுதியில் லெக்ரூம், ஹெட்ரூம் ஆகியவை போதுமான இடவசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரியர் பகுதியில் அமர்ந்து வருபவர்களுக்கு ஆர்ம்ரெட்ஸ், ஏசி வெண்ட்ஸ் தனித்தனியே உள்ளன. டாடா அல்ட்ராஸ் காரின் நீளம் 3990 மிமீ, அகலம் 1755 மிமீ, உயரம் 1523 மிமீ, வீல் பேஸ் 2501 மிமீ, கிரவுண்டு கிளயரன்ஸ் 165 மிமீ-ஆக உள்ளன. இதனுடைய பூட் ரூம் வசதி 345 லிட்டர். ஆனால் பின்புற இருக்கைகளை முற்றிலுமாக கீழே மடித்தால் இதனுடைய பூட் வசதி 665 லிட்டராக அதிகரித்துக் கொள்ள முடியும்.
டாடா அல்ட்ராஸ் காரில் XE, XM, XT, XZ மற்றும் XZ (O) என மொத்தம் 5 வேரியண்டுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பல்வேறு விதமான வசதிகளுடன் தயாராகியுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில், முதன்முறையாக குறிப்பிட்ட சில வசதிகளை தாங்கிய முதல் கார் என்ற பெருமையும் அல்ட்ராஸ் மாடலுக்கு கிடைக்கவுள்ளது.
முன்பகுதியிலுள்ள பயணி இருக்கைக்கு அருகில் குடையை மடித்து வைத்து கொள்ளும் வசதி, ஈகோ மற்றும் சிட்டி என இரண்டு டிரைவிங் மோடுகள், அணிகலனாக மாறும் விதத்திலான சாவி, தானாக இயங்கும் கிளைமேட் கண்ட்ரோல், 15 லிட்டர் கிளவ் பாக்ஸ், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதி பெற்ற ஓ.ஆர்.வி.எம் கண்ணாடிகள், மெட்டல் ஃபினிஷுடன் காட்சியளிக்கும் உட்பகுதிக்கான கதவு ஹேண்டில்கள், மூட் லைட்டிங் வசதி, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்ற இதிலுள்ள முக்கிய வசதிகளாக உள்ளன.
பாதுகாப்பு வசதிகள்:
தானியங்கி திறன் கொண்ட முகப்பு விளக்குகள், ரிவெர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், ஹை-ஸ்பீடு அலெர்ட் அமைப்பு, எஞ்சின் இம்மொபைலஸர், முன் இருக்கைக்கான இரண்டு ஏர்பேகுகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சின்:
புத்தம் புதிய டாடா அல்ட்ராஸ் கார், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவட்ரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் ரெவர்ட்ராக் டீசல் ஆகிய இரண்டு எஞ்சின் தேர்வில் தயாராகியுள்ளன. இந்த காரில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் எஞ்சின் டியாகோ மாடல் இருந்தும், டீசல் எஞ்சின் நெக்ஸான் காம்பேக்ட் காரிலிருந்தும் பெறப்பட்டுள்ளன.
இந்த இரண்டு எஞ்சின்களும் பிஎஸ்-6 விதிகளையும் பூர்த்தி செய்யும் கட்டமைப்புகளை பெற்றுள்ளன. அதன்படி, இதனுடைய பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரின் டீசல் எஞ்சின் 90 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.
அல்ட்ராஸ் காரின் இரண்டு எஞ்சின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தற்போதைக்கு இல்லை என டாடா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் விரைவில் அதற்கான பணிகளை டாடா தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர சாலைகளுக்கு ஏற்ற கட்டமைப்பை பெற்றுள்ள இந்த காரில் இலகுவாக செயல்படக்கூடிய கிளட்ச் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கூட டாடா அல்ட்ராஸ் காரை சிக்கலில்லாமல் ஓட்டிச் செல்லலாம். இதனுடைய கியர் ஷிஃப்ட்டை இயக்குவது சற்று கடினமாகவுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் மற்ற வாகனத்தை ஓவர்டேக் செய்யும் கடினம் ஏற்படலாம்.
அல்ட்ராஸ் காரை இயக்குவதிலும், கையாள்வதிலும் மிகவும் சிறப்பாகவுள்ளது. இதனுடைய பிரேக்கிங்கும் சிறப்பாக செயல்படுகிறது. எவ்வளவு வேகத்தில் சென்றாலும், இந்த காரை எளிதாக பேலன்ஸ் செய்ய முடிகிறது. ஸ்டீயரிங் இயக்குவதிலும் சிரமம் இல்லை. சாலைகளில் வளைவுகளில் செல்லும் போது, அல்ட்ராஸ் காரின் செயல்பாடு சிறப்பாகவுள்ளது.
நிறத் தேர்வுகள்:
டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் ஹை ஸ்ட்ரீட் கோல்டு, ஸ்கைலைன் சில்வர், டவுன் டவுன் ரெட், மிட்டவுன் கிரே, அவென்யூ வொயிட் உள்ளிட்ட 6 நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இன்னும் இந்த காருக்குரிய விலை குறித்து டாடா எதுவும் அறிவிக்கவில்லை. அதுதொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி: இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வந்த பிறகு, ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்டில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டாஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு சரிநிகர் போட்டியாக அமையும்.
டாடா தயாரித்துள்ள புதிய அல்ட்ராஸ் குடும்பத்தினருக்கான சிறந்த தேர்வாக இருக்கும். கேபினில் நல்ல இடவசதி இருப்பதால், குழந்தைகளுடன் பெரியவர்களும் தாராளமாக பயணிக்கலாம். காருக்கான செயல்திறனும் நேர்மறையாக முடிவுகளை தருவதால், இந்திய சந்தையில் அல்ட்ராஸ் ஒருரவுண்டு என்று எதிர்பார்க்கலாம். அதை உணர்ந்து கொண்டு டாடா நிறுவனம் விலையை அறிவிக்கும் பட்சத்தில், அல்ட்ராஸ் இந்திய சந்தையில் பெரியளவில் தடம் பதிக்கும் என நம்பப்படுகிறது.