தமிழ் நாட்டில், ஒரு அதிசய சூரியகிரகணம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் நாட்டில், ஒரு அதிசய சூரியகிரகணம்


நம் தமிழ் நாட்டில், ஒரு அதிசய சூரியகிரகணம் வருகிறது இந்த சூரிய கிரகணத்தினை வெறும் கண்ணால் பார்க்க கூடாது எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சூரிய ஒளியினை அளவைக்கட்டுப்படுத்தும் சூரிய கண்ணாடிகளையும் வாங்க சூரிய கிரகணம் பார்க்கலாம் என்ற நூலையும்  இவ்விழாவிற்கு காட்பாடி ஒன்றிசூரிய கிரகணம் பார்க்கலாம் என்ற வழிகாட்டி நூலையும் பெற்றுக்கொண்டனர்.

பகல் வானில் ஒரு பொன்வளையம் ஒரு அதிசய சூரிய கிரகணம் குறித்து தமிழ்நாடு
     வரும் 2019 டிசம்பர் 26 ம் நாளில், நம் தமிழ் நாட்டில், ஒரு அதிசய சூரியகிரகணம் வருகிறது . காலை சுமார் 8:05க்கு துவங்கும் கிரகணம் 11:16 வரை நிகழ்கிறது. அப்போது கோவை, ஊட்டி, திருப்பூர் போன்ற இடங்களில் வானில் ஒரு அற்புதக்காட்சி, காலை 9:31 முதல் 9:33 வரை கோவை, ஊட்டி, கரூர், திருச்சி, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற பகுதிகளில் நெருப்பு வளையம் போல சூரியன் காட்சி தரும். மற்ற மாவட்டங்களில் பகுதி சூரிய கிரகணம் தெரியும் அரிய இந்த வான்நிகழ்வை அனைவரும் பாதுகாப்பாகக் கண்டுகளிக்க வேண்டுமாய்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அன்போடு கேட்டுக்கொள்கிறது. இதனையொட்டி காட்பாடி ஒன்றியத்தின் சார்பில் நிகழ்ச்சிகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

கிரகணம் என்றால் என்ன?
        சூரியஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான்பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். எடுத்துக்காட்டாக, சூரியனை நிலவு மறைத்து, அதன் நிழல், பூமியில் விழும்போது அது சூரிய கிரகணம்.  பூமியின் நிழல், முழுநிலவின் மீது விழுந்து, அது மறைவது  சந்திர கிரகணம்.     கிரகணம் ஒரு இயற்கை நிகழ்வு. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்கிறது. 

வளைய சூரிய கிரகணம் என்றால் என்ன?
நிலவு, பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. அதேபோல, பூமியும் சூரியனை நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது.
எனவே நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு எப்போதும் ஒரே அளவில் இருக்காது.  சேய்மை நிலையில் உள்ள போது, நிலவின் தொலைவு கூடியும், அண்மை நிலையில் உள்ள போது, தொலைவு குறைந்தும் காணப்படும்.
       வருகின்ற 2019, டிசம்பர் 26 அன்று, பூமி சூரியனுக்கு அருகாமையில் இருக்கும். எனவே சூரியனின் தோற்றம் சற்று பெரியதாகத் தெரியும். இதே காலகட்டத்தில், நிலவு, பூமியிலிருந்து தொலைதூரத்தில் அமையும். அதனால், அதன் தோற்றம், சற்றே சிறியதாகத் தெரியும். இதன் காரணமாக, தோற்றத்தின்  அளவில் சற்று பெரியதாகக் காட்சி தரும் சூரியனை, தோற்றத்தின் அளவில் சிறியதாக இருக்கும் நிலவு, முழுதாக மறைக்க முடியாது. சூரியனின் விளிம்பு, நிலவின் வட்டத்தை தாண்டி அமையும். எனவே தான், அன்றைக்கு வானில் நெருப்பு வளையம் போலத் தென்பட்டு கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.  இதையே வளைய சூரியகிரகணம் அல்லது கங்கண சூரியகிரகணம் என அழைக்கிறோம்.
கிரகணத்தை பாதுகாப்பாகப் பார்ப்பது எப்படி?
      சூரியனை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. நுண்துளை கேமரா ( Pin hole camera ) கொண்டோ அல்லது வேறு விதத்திலோ சூரியனின் பிம்பத்தை திரையில் வீழ்த்தி, காண்பதில் எந்தவித ஆபத்தும் இல்லை.
மேலும் சூரிய ஒளியின் அளவைக்கட்டுப்படுத்தும் சூரியக்கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது பள்ளி/ கல்லூரிகள் பயன்படுத்திக்கொள்ளவும்  சூரிய கிரகண கண்ணாடி முன் பதிவுக்கு  தொட
      அறிவியல் கண்ணோட்டத்தோடு அவற்றை எதிர்கொள்வோம். வாரீர் !  என்றும் அறிவியல் பணியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 

Subscribe Here