ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு 30 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்திருப்பதால், பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
.
.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீரும், காரமடைபள்ளம், கொடநாடு பகுதிகளின் வெள்ள நீரும் வந்து சேர்ந்ததால், பவானிசாகர் அணை தனது முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 30 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது.
இந்தத் தண்ணீர் அணையின் மேல் மதகில் உள்ள 9 மிகைநீர் போக்கி வழியே பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது