தொலைதூர கல்வியின் மூலமாக ஓட்டல் மேலாண்மை, ரியல் எஸ்டேட் பட்டப்படிப்புகளை நடத்த தடை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தொலைதூர கல்வியின் மூலமாக ஓட்டல் மேலாண்மை, ரியல் எஸ்டேட் பட்டப்படிப்புகளை நடத்த தடை


புதுடெல்லி: தொலைதூர கல்வியின் மூலமாக ஓட்டல் மேலாண்மை, ரியல் எஸ்டேட் பட்டப்படிப்புகளை நடத்த பல்கலைக் கழக மானியக் குழு தடை விதித்துள்ளது.
பல்கலைக் கழக மானியக்குழு (யூஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் ஓட்டல் மேலாண்மை, சமையல் ஆய்வுகள் மற்றும் ரியல் எஸ்டேட் மதிப்பீடு ஆகியவற்றில் தொலைதூர கல்வியை நடத்துவது 2019-2020ம் கல்வியாண்டில் இருந்து அங்கீகரிக்கப்படாது. அங்கீகாரம் பெற்ற காலப் பகுதியில் திறந்த மற்றும் தொலைத்தூர கல்வி திட்டத்தில் சேர்ந்தவர்களின் படிப்பு முடியும் வரை மட்டுமே இவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
இதேபோல், சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக மானிய குழு கூட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் சேர்வதற்கான நேர வரையறையை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மழைக்காலமாகும்.
வழக்கமாக, சேர்க்கை நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்துவிடும். இந்த கல்வியாண்டில் தொலைத்தூர கல்வியில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி கடைசியில் முடிகிறது.
மாணவர் சேர்க்கை ஜூலையில் தொடங்கி செப்டம்பரில் முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு திறந்த மற்றும் தொலைதூர கல்வியில் மருத்துவம்,  பொறியியல் மற்றும் கட்டிடக்கலை பயிலுவதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை  விதித்தது. அதன் பின்னர் வேளாண் படிப்பை தொலைதூர கல்வியில் படிப்பதற்கும்  தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Subscribe Here