NEET நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

NEET நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்



எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது. வருகிற டிசம்பர் 31ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.  என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விபரங்களை இந்த இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். தேர்வுக்கான கட்டணம் செலுத்த ஜனவரி 1ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.  
மாணவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் உள்ளிட்ட தகவல்களைக் கொண்டு இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1,500, பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு ரூ.1,400, பட்டியலினத்தவருக்கு  ரூ.800 என தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
நீட் தேர்வானது 2020ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் . நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

Subscribe Here