வரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று
அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வரவுள்ளதை யொட்டி மக்கள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது சூரிய வழிபாடு, மஞ்சு விரட்டு என அனைத்து கிராமங்களிலும் ஆரவாரமாக இருக்கும்.
தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம்.
பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வரும் 14-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என ராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்!
பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.