புதிய தேர்வுப் பட்டியலை 2 வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் -ராமதாஸ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

புதிய தேர்வுப் பட்டியலை 2 வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் -ராமதாஸ்


சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை 2 வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இதுவரை செயல்படுத்தவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாரியம் தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இரண்டாம் கட்ட முடிவுகளில் தமிழ், வரலாறு, பொருளாதாரம்
ஆகிய பாடங்களுக்கான தேர்வு முடிவுகளிலும் இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருந்ததை பா.ம.க. அம்பலப்படுத்தியது.

இதனிடையே வேதியியல் பாட ஆசிரியர் தேர்வில், பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைபிடித்து புதிய தேர்வு பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஆனால், எந்த பாடத்திற்குமே புதிய பட்டியலை தயாரிக்காத ஆணையம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.
வாரியத்தின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் சமூக நீதியை காப்பதில் ஈடு செய்ய முடியாத சீரழிவை ஏற்படுத்தி விடும். எனவே, இந்த விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு, சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வேதியியல் மற்றும் பிற பாடங்களுக்கு புதிய ஆசிரியர் தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Subscribe Here