62 ஆயிரம் சம்பளத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

62 ஆயிரம் சம்பளத்தில் ஊரக வளர்ச்சி துறையில் வேலை






ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாகவுள்ள 150 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பணிக்காக காத்திருக்கும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் காலியிடங்கள்: சேலம் – 09, நாமக்கல் – 04, கிருஷ்ணகிரி – 10, நீலகிரி – 03, புதுக்கோட்டை – 07, திருப்பூர்- 12, கரூர், – 03, திருவண்ணாமலை – 11, தூத்துக்குடி – 25, கடலூர் – 20, நாகப்பட்டினம் – 12, தேனி – 14, திருவாரூர் – 08, திருவள்ளூர் – 07, அரியலூர் – 06
மொத்த காலியிடங்கள்: 150
பணி: சாலை ஆய்வாளர்
பணியின் தன்மை: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்,
ஒன்றியப் பொறியாளரின் அறிவுரைப்படி செயல்படுதல், ஒதுக்கப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்பார்வையிடல், கான்கீரிட் போடுவதை கண்காணித்தல்  மற்றும் வேலைகள் குறித்த அறிக்கைகள் சமர்பித்தல்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 35 வயதிற்கு
மிகாதவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டுமான வரைதொழில் அலுவலர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இதற்கான கல்வியை முழு நேர படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வி முறை மற்றும் பகுதி நேர படிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கான www.ncs.gov.in என்ற வலைத்தளத்திலும் மற்றும் அந்தந்த மாவட்ட https://tiruvallur.nic.in  வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: சம்மந்தப்பட்ட மாவட்டம் அறிவித்துள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து  பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு சரியான தினங்களுக்கு முன்பாக சென்று சேருமாறு பார்த்துக்கொள்ளவும்.

Subscribe Here