புதிய வருடம் பிறந்தாச்சு. நமது உடல்நிலை எப்படி இருக்கிறது என சீர்தூக்கிப்பார்ப்பது மிகவும் அவசியம்.புத்தாண்டுக்கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் இன்றைய நவநாகரீக காலத்தில் ஆரோக்கியமே சிறந்த செல்வம் என அறிஞர் பெருமக்களின் கருத்து.ஆதலால் இந்த புத்தாண்டில் ஒரு புதிய தீர்மானம் எடுப்போம்.அதாவது ஆரோக்கியமே முக்கியம் என்றும் ஆரோக்கியமாக இருக்க சில முடிவுகள் எடுப்பேன் என்பதுதான்.
அதைச் சாப்பிடுங்கள் ,இதைச்சாப்பிடுங்கள் என சொல்லப்போவதில்லை.
இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள்
இயற்கையான இடங்கள் என்றால் காடு, மலை, ஏரி குளம் ,ஆறு,வயல்வெளி, பூங்கா,தோட்டங்கள் ஆகியவை சார்ந்த இடங்களை குறிக்கலாம். இவ்வாறான இடங்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது சென்று காலார நடந்து வந்தால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.இதனால் மனம் இயற்கையில் வலுப்பெறுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மனச்சோர்வை மாற்றி புத்துணர்வு தருகிறது.சுவாச கோளாறுகள் நீங்குகிறது.பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
மனதிற்கு இளமை உணர்வை ஏற்படுத்துகிறது.ஆதலால் விடுமுறை நாட்களில் மட்டுமல்லாது அவ்வப்போது இயற்கை சூழ்ந்த இடங்களுகு சென்று வருதல் நலமே.இதைத்தான் சிலர் ஆன்மீகப்பயணம் என்ற பெயரில் சென்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம். அதன் ரகசியம் இதுதான் நண்பர்களே.
நீண்ட நடை நடக்கப்பழகுங்கள்
மாரத்தான் பயிற்சியோ உடற்பயிற்சி கூடத்திற்கோ போகாமல் சாதாரண நடைபயிற்சியை தினமும் செய்து வந்தாலே போதுமானது.அமெரிக்கவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தினமும் 25 நிமிடங்கள் தொடர்ந்து நடந்து வருவன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் இதயம் சார்ந்த நோய்களுக்கு உடலில் ஏற்படும் வாய்ப்பில்லை என தெரிவிக்கிறது.
இதயத்தில் உள்ள தமணி, சிரை ஆகிய இரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்புகள் ஏற்படாது .இதனால் ஆஞ்சியோ, மற்றும் பைப்பாஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நடைபயிற்சி தொடர முடியாதவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்துச்செல்லுங்கள்.அப்பொழுது பேசிக்கொண்டே நடந்தால் பொழுது போவது தெரியாது.குடும்பத்தார் நடைபயிற்சிக்கு வாய்ப்பில்லையா கவலையை விடுங்கள் .செல்போன் ஹெட்போனை காதில் பொருத்திக்கொள்ளுங்கள் நடையை தொடருங்கள்.இனி உங்கள் வாழ்க்கை வசந்தமே.
சூரிய வெளிச்சம் தேடுங்கள்
காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய வெளிச்சம் நமது உடலில் பட்டால் பினியில்லை என்ற நமது தமிழ் முதுமக்களின் கருத்திற்கு ஏற்ப நாம் நமது உடலில் சூரிய ஒளிபடுவதால் வியர்வை சுரந்து நாளமில்லாசுரப்பிகள் சிறப்பாக செயல்படமுடிகிறது.எலும்பு வலுப்பெறுகிறது. சூரியஒளி பெறமுடியாதவர்கள் வீட்டில் சூரியவெளிச்சம் படும்படியாக சன்னல்களை திறந்துவைக்கவேண்டும்
.கர்ப்பினி பெண்கள் மற்றும் கைக் குழந்தைகள் சூரியவெளிச்சம் பெற்றால் உயிர்ச்சத்து டி கிடைத்து எலும்புகள் பலமடைகிறது. குளிர் காலத்தில் சூரியகுளியல் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும்.ஆதலால்தான் குளிர்பிரதேச மக்கள் கடற்கரையில் சூரிய குளியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை நாம் அறிந்ததே.
மசாஜ் செய்துகொள்ளுங்கள்
மசாஜ் செய்துகொள்வதால் மனதிற்கு மனதிற்கு ரிலாக்ஸ் கிடைக்கிறது.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மசாஜ் செய்யலாம்.உடலுக்கும் மனதிற்கும் புத்துனர்வு தருகிறது.
மசாஜ் செய்வதால் நல்ல தூக்கம் ஏற்படுகிறது. இன்றைய காலத்தில் தூக்கம் தொலைத்த மனித இனம் என்ற நிலையிருக்கிறது.இதனால் உடலில் பல நோய் ஏற்பட காரணமான தூக்கம் இயல்பாகவே பெற மசாஜ் மிகவும் அவசியம்.தாய்லாந்து போன்ற நாடுகளில் மசாஜ் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்ற நிலையில் உள்ளது.