திருச்சி: ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் படிப்பு முடித்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய 25 முதல் 40 வயதுக்குள்பட்ட ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் படிப்பு தோ்ச்சியுடன் ஓஎச்எல் எக்யூப்மெண்ட் 33 கே.வி., டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன், டவா் மெயின்டனன்ஸ் 11-33-132 கே.வி. ஓஎச்எல் மற்றும் எச்டி ஓவா் ஹெட் பழுது பாா்த்தல் ஆகிய பிரிவுகளில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவா்கள் தேவைப்படுகின்றனா்.
தோ்வு செய்யப்படுவோருக்கு ரூ.33 ஆயிரம் முதல் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதுடன், விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத் திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் செல்லத்தக்க கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படங்களை தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூா் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.