முடங்கியது, புதுச்சேரி… பள்ளி, கல்லூரிகள் விடுமுறை… - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முடங்கியது, புதுச்சேரி… பள்ளி, கல்லூரிகள் விடுமுறை…


விலைவாசி உயர்வு என பல்வேறு இடையூறுகள் வந்தாலும் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படாமல் உள்ளது எனக் குற்றம்சாட்டி
வந்த உழைப்பாளர்கள், தொடர்ந்து 2வது ஆண்டாக ஜனவரி 8ஆம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டை முடங்கிப் போகச் செய்து விட்டனர்.


பாரத் பந்த் 2020இல் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் கூட்டமைப்பு பங்கேற்றுள்ளனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 21 ஆயிரம் வழங்க வழி செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம்
ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்ததாரர் தொழிலாளர் முறையைக் கைவிட வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், குடியுரிமை சட்டத் திருதத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே இப்போது பாரத் பந்த் நடக்கிறது.

தமிழ்நாடு, கர்நாடகாவிலிருந்து சபரிமலை தவிர, கேரளாவில் வேறு எந்த பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கேரளாவில் வேலை பார்க்கும் தமிழ் நாட்டினர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
புதுச்சேரி அரசு ஆதரவுடன் பந்த் நடைபெறுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள், கடைகள் என அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தனியார்ப் பள்ளிகளுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுவிட்டது.

புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பந்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்றிருக்கின்றனர். இதனால் 6. 50 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளது. இன்று மாலை நேரத்தில் ஏடிஎம் மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Subscribe Here