ஜேஇஇ மெயின் தேர்விற்கான (JEE) விடைக் குறிப்புகள் வெளியீடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜேஇஇ மெயின் தேர்விற்கான (JEE) விடைக் குறிப்புகள் வெளியீடு


ஜேஇஇ மெயின் தேர்விற்கான (JEE) விடைக் குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://jeemain.nta.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஐஐடி, என்.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கு ஜெஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இதில், 12ம் வகுப்பில் 75 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். தற்போது, 2020- 21ம் கல்வியாண்டிற்கான JEE Main 2020 நுழைவுத்தேர்வு கடந்த 6 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதனிடையே, ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்புகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். 

  JEE Main 2020 Answer Key ஆன்லைனில் காணும் முறை:- தேர்வர்கள் https://jeemain.nta.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதன் முகப்பு பக்கத்தில் JEE Main 2020 Answer Key என்னும் பகுதியை கிளிக் செய்யவும். தற்போது, புதிதாக திறக்கப்பட்ட JEE Main 2020 Answer Key பக்கத்தில் விண்ணப்பதாரர் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்யவும். தற்போது JEE Main 2020 Answer Key-யை காணலாம்.

Subscribe Here