தமிழ்நாடு அரசின் கல்விச் சேவைகளில் (Tamil Nadu Educational Service) இடம்பெற்றிருக்கும் அரசு பாலிடெக்னிக் நிறுவனங்கள், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத சிறப்பு நிறுவனங்களில் (Special Institutions (Engineering / Non Engineering)) காலியாக இருக்கும் 1060 விரிவுரையாளர் (Lecturer) பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்:
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில்
கட்டுமானப் பொறியியல் – 112,
இயந்திரவியல் பொறியியல் – 219,
மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் – 91,
கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் – 3,
கணினிப் பொறியியல் – 135,
தகவல் தொழில்நுட்பம் – 6,
உற்பத்திப் பொறியியல் (Production Engineering) – 6,
நெசவுத் தொழில்நுட்பம் – 3,
அச்சுத் தொழில்நுட்பம் – 6 என்று மொத்தம் 700 விரிவுரையாளர் பணியிடங்களும், பொறியியல் அல்லாத பிரிவுகளில்
ஆங்கிலம் – 88,
கணிதம் – 88,
இயற்பியல் – 83,
வேதியியல் – 84,
நவீன அலுவலகப் பயிற்சி (Modern Office Practice) – 17 என்று மொத்தம் 360 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொறியியல்
மற்றும் பொறியியல் அல்லாத 15 பாடப்பிரிவுகளிலும் இருக்கும் 1060 இடங்களில் பாடம், இன வாரியாக இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள், தகவல் குறிப்பேட்டில் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது.
மற்றும் பொறியியல் அல்லாத 15 பாடப்பிரிவுகளிலும் இருக்கும் 1060 இடங்களில் பாடம், இன வாரியாக இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள், தகவல் குறிப்பேட்டில் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது.