இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் உள்ள காலியாக உள்ள 46 இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் போன்ற பணியிடங்களை விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 46
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Accountant (JA) in Postal Accounts Office – 02
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
பணி: Postal Assistant (PA) in Post Offices or Administrative Offices -11
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
பணி: Sorting Assistant (SA)in Railway Mal Offices – 04
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
பணி: Postman (PM) in Post Offices – 27
சம்பளம்: மாதம் ரூ.21,700 – 69,100
தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்
. குறைந்தது 10 ஆம் வகுப்பு வரையில் கன்னட மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதிகள் அடிப்படையில் தேர்வு பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும்.
கட்டணத்தை வங்கி பரிவர்த்தணை அட்டைகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.karnatakapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2020