பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.20 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.20


திருக்குறள்


அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

விளக்கம்:

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு
மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

பழமொழி

Evil begotten evil

 கெடுவான் கேடு நினைப்பான்

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.

2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, பிரச்சனைகள் தோற்கடிக்க
அனுமதிக்க கூடாது.

Dr. அப்துல் கலாம்

பொது அறிவு

1.மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் எது?

 நெருப்புக்கோழி

2.சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது எது?

 முகுளம்

English words & meanings

 Numismatics – study of coins. நாணயங்கள் குறித்த படிப்பு.

Navigable - water bodies used for transport. கடல் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற


ஆரோக்ய வாழ்வு

இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு .எனவே இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

Some important  abbreviations for students

GC - Game console.

CO - Co-opted

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

துறவியின் அன்பு

குறள் :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்.

விளக்கம் :
தீமை செய்பவர்களை தண்டிக்க அவர்
வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.

கதை :
ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்
.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள்.

அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார், ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது.
ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

நீதி :
நமக்கு ஒருவர் தீமையை செய்தாலும் அவர்களுக்கு நாம் நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.

புதன்
கணிதம் & கையெழுத்து

வடிவம்

நந்தா தன் வீட்டின் சுற்றுச்சுவரை அழகுபடுத்த நினைத்தார் .முதல் படியாக அளக்க வேண்டும் அல்லவா...விகாஷ் உதவியுடன் அளந்து எழுதினார் ..
அப்போது விகாஷ் கேட்ட
கேள்வி:

1)ஏன் இரண்டு பக்கம் மட்டும் அளந்தீர்கள் ..?

2) ஏன் இரண்டு அளவும் வேறுபடுகிறது?

நத்தாவின்
பதில்:
செவ்வக வடிவில் உள்ளதால் ,ஒரு நீளம் ஒரு அகலம் அளவு மட்டும்
போதுமானது.

2)அகலம் பொதுவாக நீள அளவைவிட குறைவாக இருக்கும் .ஆனால் சம்மாகவோ ..
அதிகமாகவோ இருக்கவும் வாய்ப்புள்ளது...

கையெழுத்துப் பயிற்சி - 27



இன்றைய செய்திகள்

12.02.20

◆கால்நடைத் துறை பணியிடங்களுக்கான தேர்வு சென்னையில் மட்டும் நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

◆பள்ளிகளில் நன்கொடை வசூலிக்கப்பட்டாலோ, ஏப்ரலுக்கு முன்னால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு திருச்சூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு மாணவி முழுவதுமாக குணமடைந்து உள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

◆ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்காக ஆலன் பார்டர் விருதை தொடக்க வீரர் டேவிட் வார்னர் வென்றார்.

◆மணிலாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லவும், தரவரிசை புள்ளிகளை ஈட்டவும் இந்திய ஆடவா் அணி தயாராக உள்ளது.

Subscribe Here