விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலக்கோட்டையூர் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் காலையில் சமையல் அறையில் வழக்கம் போல் மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சமையலர் அங்காள ஈஸ்வரி மற்றும் சத்துணவு அமைப்பாளரின் 2 வயது குழந்தை ஹர்சித் ஆகிய இருவரும் காயமடைந்து
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.