பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு


பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால
அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விளம்பர எண்: NR-III/FTB/2020/01
மொத்த காலியிடங்கள்: 36 
நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Field Engineer (Electrical) – 14
பணி: Field Engineer (Civil)  – 06
சம்பளம்:  மாதம் ரூ.  30,000 + இதர சலுகைகள்
பணி: Field Supervisor (Electrical) – 10
பணி: Field Supervisor (Civil) – 06
சம்பளம்: மாதம் ரூ. 23,000 + இதர சலுகைகள்
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக்,  பி.எஸ்சி., டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 06.03.2020 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு லக்னோ மற்றும் அக்ராவில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: Field Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.400, Field Supervisor பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி பரிவர்த்தனை அட்டைகள் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்துறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2020

Subscribe Here