கோவை: கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – அனிதா தம்பதியின் மகன் தர்ஷன், 9. மூன்றாம் வகுப்பு படிக்கும் தர்ஷன், தன் நான்கு வருட உண்டியல் சேமிப்பு
தொகையான, 2,351 ரூபாயை, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் வழங்கினார்.
தொகையான, 2,351 ரூபாயை, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியிடம் வழங்கினார்.
இதுகுறித்து தர்ஷன் கூறுகையில், ‘எனக்கு சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும். எனது சேமிப்பில் சைக்கிள் வாங்க வேண்டுமென, நான்கு ஆண்டுகளாக, என் பெற்றோர் தரும் சிறிய தொகையை உண்டியலில் சேமித்து வந்தேன். கொரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், எனது சேமிப்பை, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன்’ என்றார்.
மாணவனின் இச்செயலை கலெக்டரும் தன்னார்வலர்களும் பாராட்டினர்.
மாணவனின் இச்செயலை கலெக்டரும் தன்னார்வலர்களும் பாராட்டினர்.