இந்தியா கொரனாவுக்கு எதிராக நடத்தி வரும் போரில் இது முதல் வெற்றி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியா கொரனாவுக்கு எதிராக நடத்தி வரும் போரில் இது முதல் வெற்றி


கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே வேளையில் இப்போதுவரை கொரோனா தொற்றை விரட்ட முறையான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மருந்துகள்
கூட்டாக வழங்கப்பட்டு அதனுடன் கேன்சர், எய்ட்ஸ் நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளும் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுவதாக இந்திய மருத்துவர்கள் கூறுகிறா
இந்த சூழலில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உடல் செயலிழந்து வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தவருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு அவர் குணமடைந்த மகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொரோனா அச்சத்தில் நாடே ஆழ்ந்துள்ள நிலையில், இந்த நம்பிக்கையூட்டும் சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்
என்ற தனியார் மருத்துவமனையில் 49 வயதடைந்த ஆண் ஒருவர் கொரோனா நோய்த் தொற்று காரணமாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பெற்று வந்த சம்பந்தப்பட்ட நபர் குணத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் வெண்டிலேட்டர் உதவியோடுதான் அந்த கொரோனா பாதித்த நபருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் அந்த நபரின் குடும்பத்தார், சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையிடம் ப்ளாஸ்மா சிகிச்சை முறையில் நோய் பாதித்த நபருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா ப்ளாஸ்மா சிகிச்சை முறை: கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நபர்களிடம் ரத்தத்தைத் தானமாகப் பெற்று,
அந்த ரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மா அணுக்களைப் பிரித்து எடுத்து, அந்த ப்ளாஸ்மாக்களை கொரோனா தொற்றால் மிகவும் சிரமப்பட்டு வரும் நபரின் ரத்தத்தில் பொருத்துவது. இதன் மூலம் கொரோனாவால் தவித்து வரும் சம்பந்தப்பட்ட நபர் குணமடைய அதிக வாய்ப்புள்ளது.
அமெரிக்கா சுகாதார நிறுவனம் ப்ளாஸ்மா சிகிச்சை
முறை கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவு வெற்றி அடைவதாகத் தெரிவித்திருந்தது. சீனாவும் ஆய்வுகளை மேற்கொண்டு ப்ளாஸ்மா சிகிச்சை முறையை முன்னெடுத்திருந்தது.

இந்நிலையில் கொரோனா பாதித்த நபருக்குக் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ப்ளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதன்பின் அந்த நபரின் குணத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்துள்ளது. இப்போது அவர் முழுமையாக கொரோனாவை
வென்றுள்ளார். குறிப்பாக அவருக்கு 2 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில், கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
இந்த முறையைத் தனியார் மருத்துவமனை முன்னெடுத்துள்ள நிலையில், இதே முறையில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா கொரனாவுக்கு எதிராக நடத்தி வரும் போரில் இது முதல் வெற்றி எனக் கூறப்படுகிறது.

Subscribe Here