கொரோனா தொற்று பாதித்த பல நபர்களுக்கு சுவை மற்றும் நுகரும் தன்மை இழப்பு ஏற்பட்டுள்ளதாக லண்டன் மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சளி பரிசோதனை நடந்த 6 நாட்களுக்குப் பிறகு, லண்டன் Guy’s Hospital-ஐ சார்ந்த மருத்துவர்கள் இத்தாலியை சேர்ந்த 202 கொரோனா நோயாளிகளிடம் தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வை நடத்தினர்.
அதில் 67 சதவிகிதம் பேருக்கு வாசனையை நுகரும் தன்மையும், சுவை அறியும்
தன்மையும் காணாமல் போய் விட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவ இதழான JAMA தெரிவித்துள்ளது.
தன்மையும் காணாமல் போய் விட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவ இதழான JAMA தெரிவித்துள்ளது.
68.3 சதவிகிதம் பேர் தங்களுக்கு கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் வறட்டு
இருமலாலும், 55.5 சதவிகிதம் பேர் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இருமலாலும், 55.5 சதவிகிதம் பேர் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்பட்டால், இது போன்ற நுகரும் தன்மையை இழக்கும் நபர்களுக்கு கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதலில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.