ஊரடங்கில் ரகசியமாக நுழைவுத்தேர்வு : பள்ளியை இழுத்து பூட்டிய அதிகாரிகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஊரடங்கில் ரகசியமாக நுழைவுத்தேர்வு : பள்ளியை இழுத்து பூட்டிய அதிகாரிகள்


இந்தச் சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், “எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் ரகசியமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.



முதற்கட்டமாகப் பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றிப் பூட்டியுள்ளோம்.
தொடர் விசாரணைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இந்த விவகாரம் குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட முயற்சி செய்தோம். அவர்கள் நம்மிடம் பேச மறுத்துவிட்டனர்.
அதிகாரிகளின் விசாரணையில், இந்தப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தும் மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கட்டணம் வசூலிப்பதே பெரும் குற்றமாகக் கருதப்படும் நிலையில் அதற்கு ஒருபடி மேலே போய் அடுத்த கல்வியாண்டுக்கு நுழைவுத்தேர்வு நடத்திக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அதிகாரிகள்.

Subscribe Here