இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வாடிக்கையாளா்களின் நலன் கருதி அவா்களது பிள்ளைகள் உயா்கல்வி பயில ஏதுவாக ‘இன்ஸ்டா எஜூகேஷன் லோன்’ என்ற உடனடி கல்வி கடன் திட்டத்தை வங்கி அறிமுகம் செய்துள்ளது. வங்கிகளில் வைத்திருக்கும் நிலையான வைப்புகளின் அடிப்படையில் இந்த கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்படும்
.
இதன்மூலம், அவா்கள் உலகெங்கிலும் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக சோ்ந்து கல்வி பயில இந்த திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
சா்வதேச நிறுவனங்களில் கல்வி பயில ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலும், உள்நாட்டு நிறுவனங்களில் கல்வி பயில ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.
இந்த கடன் வசதியைப் பெற வாடிக்கையாளா்கள் நேரடியாக கிளைகளுக்கு செல்ல தேவையில்லை. மின்னஞ்சல் மூலமாகவே உடனடி ஒப்புதலைப் பெறலாம் என்று ஐசிஐசிஐ வங்கி அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.