முதல் முறையாக மாவட்ட வாரியான பரிசோதனைகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியீடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

முதல் முறையாக மாவட்ட வாரியான பரிசோதனைகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியீடு



தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் 1,497 பேர், பிறமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேர் என மொத்தம் 1,515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டது.  தமிழகத்தில் 1,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறை ஆகும்.
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்  
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 இல் இருந்து 16,999 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேர், அரசு மருத்துவமனைகளில் 13 பேர் என ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் தமிழகத்தில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 8வது முறையாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக முதல் முறையாக மாவட்ட வாரியான பரிசோதனைகளின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  
அதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் –     3,950
செங்கல்பட்டு  –     13,958
சென்னை  –     1,21,950
கோவை  –         22,872
கடலூர்  –         11,918
தர்மபுரி –         9,854
திண்டுக்கல் –     7,582
ஈரோடு –         13,421
கள்ளக்குறிச்சி –     8,653
காஞ்சிபுரம் –     9,885
கன்னியாகுமரி –     18,366
கரூர் –         8,218
கிருஷ்ணகிரி –     6,565
மதுரை –         14,102
நாகை –         7,958
நாமக்கல் –     7,727
நீலகிரி –         5,604
பெரம்பலூர் –     3,999
புதுக்கோட்டை –     6,243
ராமநாதபுரம் –     7,074
ராணிப்பேட்டை –     5,480
சேலம் –         22,751
சிவகங்கை –     5,400
தென்காசி –     7,163
தஞ்சை –         17,820
தேனி –         16,945
திருவள்ளூர் –     11,065
திருவாரூர் –     8,448
திருச்சி –         14,453
நெல்லை  –     17,624
திருப்பத்தூர் –     9,911
திருப்பூர் –         8,153
திருவண்ணாமலை –     21,996
தூத்துக்குடி –     13,227
வேலூர் –         16,279
விழுப்புரம் –     9,795
விருதுநகர் –     10,803
மொத்தம் –     5,27,212

Subscribe Here