அதிலும் கடந்த சில வாரங்களாக இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது, இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 6,000-த்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவுக்கு ஆபத்து என WHO-வின் அவசரக்கால திட்ட நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் வெடிக்கவில்லை, ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கைத் தளத்தினால் நாடு அபாய கட்டத்தை அடையும்.
நேற்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் வெடிக்கவில்லை, ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கைத் தளத்தினால் நாடு அபாய கட்டத்தை அடையும்.
Also Read:
இந்தியாவில் தொற்றுநோய் பயணத்தின் திசை அதிவேகமாக இல்லை, இந்த சமயத்தில் அது மெது மெதுவாக அதிகரித்து வருகிறது. தொற்றுநோயின் தாக்கம் இந்தியாவின் நகர்ப்புற பகுதிக்கும் கிராமப்புறத்துக்கும் இடையில் வேறுபடுகிறது. இந்தியா மட்டுமல்ல தெற்காசிய நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள பல நாடுகளிலும் வைரஸ் வெடிக்கவில்லை ஆனால் இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அதனால், பெரும் ஆபத்து ஏற்படும்.
இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வைரஸ் பரவலைக் குறைத்திருந்தன, ஆனால் மற்ற பெரிய நாடுகளைப் போலவே இந்தியாவும் ஊரடங்கைத் தளர்த்தி மக்களை வெளியில் செல்ல அனுமதிக்கையில், அங்கு மீண்டும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஊரடங்கைத் தளர்த்தினாலும் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களால் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளார்.