7 ஆம் வகுப்பில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பாடபகுதிகள் நீக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

7 ஆம் வகுப்பில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பாடபகுதிகள் நீக்கம்

பெங்களூரு: மாநிலத்தின் 7 ம் வகுப்பு பாடத்தில் இருந்து திப்பு சுல்தான், ஹைதர் அலி குறித்த பாடபகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று நோய் காரணமாக கர்நாடக மாநில அரசு 2020-21 ம் ஆண்டிற்கான பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்தது. மேலும் பள்ளி வேலை நாட்கள் 120 நாட்களாகவும்குறைத்துள்ளது. இதனையடுத்து 7 ம் வகுப்பில் சமூக அறிவியல் பாடபிரிவில் 5-ம் அத்தியாயத்தில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி ஆகியோரை குறித்த பாடபகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள கர்நாடக மாநில அரசின் பாட புத்தக நிறுவனம் 6 மற்றும் 10 ம் வகுப்புகளில் சமூக அறிவியல் பாடப்பிரிவில் திப்பு சுல்தான், மற்றும் ஹை தர்அலி பாட பகுதிகள் நீக்கப்படவில்லை என விளக்கம் கூறி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி பாட புத்தகத்தில் இருந்து திப்பு பகுதிகளை நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் வட்டாரத்தில் வலுவான கோரிக்கை எழுந்தது. இது குறித்து ஆராய மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது.அக்குழு எந்த ஒரு சூழ்நிலையிலும் பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் ,ஹைதர் அலியை நீக்கி வைக்க முடியாது என பரிந்துரைத்தது.
பிரிட்டிசாரின் படைகளுக்கு சிம்ம சொப்னமாக திகழ்ந்து வந்த திப்பு சுல்தான் 1799ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீரங்கப்பட்டனத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார். இதனிடையே கொடகு மாவட்டத்தில் கூர்கிஸ் இன மக்கள் ஆயிரக்கணக்கில் சிறைபிடிக்கப்பட்டு மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என்ற நம்பிக்கை நிலவுகிறது .

Subscribe Here