NEET தேர்வு மையம் எங்கே? மாணவர்கள் அறிய வசதி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

NEET தேர்வு மையம் எங்கே? மாணவர்கள் அறிய வசதி


நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான, தேர்வு மையங்களை பார்க்கும் வசதியை, தேசிய தேர்வு முகமை அறிமுகம் செய்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய அளவில் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டுக்கான தேர்வு, மே மாதம் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, செப்., 13ல் நீட் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீட் - ஜே.இ.இ., போன்ற தேர்வுகளை, ரத்து செய்ய முடியாது என்றும், திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதை தொடர்ந்து, நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. 

இதன் ஒரு கட்டமாக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வசதி, இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'மாணவர்களின் பதிவு எண், தேர்வு மையம், தேர்வுக்கான மொழி, தேர்வு மையத்துக்குள் வரும் நேரம் போன்ற தகவல்களுடன், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here