இந்தியாவின் 1.26 லட்சம் கொரோனா இறப்புகளில் 17 சதவீதம் காற்று மாசுபாடுடன் தொடர்புடையவை என்று ஐரோப்பிய நிறுவனங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பை காற்று மாசு அதிகப்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் சமீப காலமாக எச்சரித்து வருகின்றனர். காற்று மாசு மிக உயர்ந்த நிலையில் இருக்கும்போது வெளியில் செல்ல வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கமும் எச்சரித்துள்ளது. “காற்றின் தரம் 50 முதல் 100-க்குள் இருந்தாலே சுவாச நோயாளிகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதுவே 300-க்கு மேல் சென்றால் ஆரோக்கியமாக இருப்பவர்களையும் பாதிக்கும்.” என மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ராஜன் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பாவின் வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 6 ஆராய்ச்சியாளர்கள் கொரோனா இறப்புகளையும், காற்று மாசையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். அந்த ஆராய்ச்சி முடிவில், இந்தியாவின் 1.26 லட்சம் கொரோனா தொடர்பான இறப்புகளில் 17 சதவீதம் காற்று மாசினால் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர். இதன் உலகலாவிய சராசரி 15 சதவீதம் என்று தெரிவித்திருக்கின்றனர். ஒட்டுமொத்த டில்லியும் கடந்த ஒரு மாதமாக மூச்சு திணறலை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை அன்று காற்றின் தரம் 443 என்ற மிக மோசமான அளவை பதிவு செய்துள்ளது. அங்கு நவ., 3-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக