பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை பேப்பர் கப் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது. மழைக்காலத்தில் டீ, காபி நமக்குக் கதகதப்பு அளிப்பதாக இருப்பதால், அடிக்கடி நாம் அதை அருந்துகிறோம். மேலும், வெயில் காலத்திலும் காபி, டீ இல்லையென்றால் வேலை நடக்காது என்று அடிக்கடி கேன்டீன், டீ கடைக்குச் சென்று வருபவர்கள் பலர்.
அலுவலக இடைவேளையில் டீ, காபி குடிக்கச் செல்லும்போது அவற்றை பேப்பர் கப்பில் அருந்துவதே பலரின் வழக்கம். மேலும், வெளியில் எங்கு சென்றாலும் பேப்பர் கப்பிலேயே டீ, காபி பரிமாறப்படுகிறது. இந்நிலையில் அந்த காகித கப் பாதுகாப்பானதல்ல என்று ஐ.ஐ.டி காரக்பூர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில், ஒரு நாளில் மூன்று முறை பேப்பர் கப்பில் டீ அருந்தும் நபருக்கு 75,000 மிகச்சிறிய நுண் பிளாஸ்டிக் பொருள்கள் உடலுக்குள் செல்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக்கு வழிகாட்டிய ஐ.ஐ.டி காரக்பூரின் இணைப் பேராசிரியர் சுதா கோயல் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், “காகித கப்பில் உள் பூச்சு பெரும்பாலும் நெகிழிப் பொருள்களால் ஆனது. எங்கள் ஆய்வில், இந்தக் காகித கப்பில் வழங்கப்படும் சூடான பானங்களுடன், காகித கப்பின் உள் பூச்சிலுள்ள நெகிழிப் பொருள்கள் கலந்துவிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூடான திரவம் பட்ட 15 நிமிடங்களில் நெகிழிப்பூச்சு சிதைந்து பானத்தில் கலந்து உடலில் கலந்து விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக