இளநிலை முதுநிலை பட்டப்படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: தேர்வு எழுதாமலேயே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை ஆகியவை அறிவித்துள்ளன.இது தேர்வுக்கு முழுமையாக தயார்படுத்திய மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பல்கலை மானிய குழுவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு ஆணைப்படி அரியர் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக பல்கலை அறிவித்தது சட்டவிரோதம். அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக