-சென்னை: சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் ஆவணி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. இந்த மாதத்தில் பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நவகிரகங்களின் சஞ்சாரத்தினாலும் இடப்பெயர்ச்சி பார்வையினாலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சிம்ம ராசியில் ஆட்சி பெற்ற சூரியனுடன் செவ்வாய் புதன் பயணம் செய்கின்றனர். ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகரத்தில் சனி வக்ரம், கும்ப ராசியில் குரு வக்ரம் என கிரகங்களின் சஞ்சாரம் எல்லாம் உள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால் ஆவணி 10ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். ஆவணி 20ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். ஆவணி 29ஆம் தேதி குரு மகர ராசிக்கு திரும்புகிறார். இந்த மாதத்தின் 12 ராசிகளில் கிரக சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. ஆட்சி பெற்ற சூரியன், உச்சம் பெற்ற புதன், ஆட்சி பெற்ற சுக்கிரன் ஆட்சி பெற்ற சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன.இந்த மாதத்தில் ஓணம் பண்டிகை, ஆவணி அவிட்டம், ஸ்ரீ சனி ஜெயந்தி, கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி,கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. பண்டிகைகள் நிறைந்த ஆவணி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். தனுசு குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால், ஒன்பதாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் கேது, இரண்டாம் வீட்டில் சனி, மூன்றாம் வீட்டில் குரு, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
இதுநாள் வரைக்கும் எட்டாவது வீட்டில் அமர்ந்து பாடாக படுத்தி வந்த யோகாதிபதி சூரியன் இன்று முதல் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வழக்குகள் சாதகமாக முடியும் வெற்றிகள் தேடி வரும். செவ்வாய் பத்தாம் வீட்டிற்கு செல்வதால் பிள்ளைகள் கல்வி விசயமாக செலவு செய்வீர்கள். மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும். சுக்கிரன் போக்கும் சாதகமாக உள்ளது. வீடு மனை வாங்கலாம் வண்டி வாகனம் வாங்கலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த புரிதல் நன்றாக இருக்கும். புதிய வேலை தேடி வரும். வேலை மாற்றம் ஏற்படும். விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நன்மையைக் கொடுக்கும்.மகரம் சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, ஆவணி மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், லாப வீட்டில் கேது, ராசியில் சனி இரண்டாம் வீட்டில் குரு, ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக ஏழாம் வீட்டில் பயணம் செய்தார் சூரியன் இன்று முதல் எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். எதிலும் நிதானம் தேவைப்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். பெரிய அளவில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். குழந்தை பாக்கியம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். புதன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. நெருப்பு, மின்சாதனங்களை கையாளும் போது விழிப்புணர்வு அவசியம். வியாபாரம் தொழில் லாபமாக இருக்கும். உத்யோக வகையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும் நெருக்கடிகளை தவிடுபொடியாக்கி ஜெயித்து காட்டும் மாதமாக அமைந்துள்ளது. அனுமனை வணங்க வெற்றிகள் தேடி வரும் அதிர்ஷ்டங்கள் கை கூடி வரும். கும்பம்சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் புதன், செவ்வாயுடன் பயணம் செய்கிறார். எட்டாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி, உங்கள் ராசியில் குரு, நான்காம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. ஏழாம் வீட்டில் உள்ள சூரியன், செவ்வாய்,புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிரன் பயணம் நன்றாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். ராஜயோகம் கை கூடி வரும். ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் வரும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஈகோ பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதர வகையில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் பலவீனம் நீங்கி பலம் அதிகரிக்கும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெறும். குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகி விரைய ஸ்தானத்திற்கு பயணம் செய்கிறார். பண வரவு அதிகமாக இருந்தாலும் சுப செலவுகளும் அதிகரிக்கும். இந்த மாதத்தில் குரு பகவானை வியாழக்கிழமை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும். மீனம்குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, ஆவணி மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ஏழாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் தீராத பிரச்சினைகள் தீரும் புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி வாகனம் வாங்கலாம். உங்களுடைய பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி வீடு வாங்கலாம். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீரும். புதன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களால் உதவி கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திடீர் பண வரவு வரும். மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளவும். திருமணம் தொடர்பாக பேசலாம் வெற்றிகரமாக கைகூடி வரும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். பண வரவுக்கு ஏற்ப சுப விரைய செலவுகள் வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு இந்த மாதம் உயர்கல்விக்கு ஏற்றதாக உள்ளது. படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் உணவு விசயத்தில் கவனம் தேவை. பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். புது ஏஜென்சி எடுத்து நடத்துவீர்கள். வேலையில் வெற்றிகள் தேடி வரும். புரமோசன் கிடைக்கும். வேற்று மொழிக்காரர்களின் உதவி கிடைக்கும். ஆவணி மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக