தமிழகத்தில் ஆன்லைனில் இனி செமஸ்டர் தேர்வுகள் கிடையாது.. தேர்வு.. வருகிறது மாற்றம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் ஆன்லைனில் இனி செமஸ்டர் தேர்வுகள் கிடையாது.. தேர்வு.. வருகிறது மாற்றம்!

 -கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தாக்குவதற்கு, சாத்தியமில்லை என்று சுகாதார நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் () அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் இனி மாணவர்களை கல்லூரிக்கு வரவழைத்து நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கோவிட் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, சுயநிதி நிறுவனங்கள் உட்பட உயர் கல்வி நிறுவனங்களில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டன.இந்த நிலையில்தான், வரும் டிசம்பரில் நடைபெற உள்ள அனைத்து டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் () ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு போல நடக்கும்"பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் கொரோனாவுக்கு முந்தைய கால நடைமுறையில் நடத்தப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராக்டிக்கல் தேர்வுலாக்டவுன் காலத்தில், தொழில்நுட்ப படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கான பிராக்டிக்கல் தேர்வுகளை நடத்த முடியவில்லை. எழுத்து மற்றும் பிராக்டிக்கல் தேர்வுகளை நடத்தும் போது சமூக இடைவெளி உட்பட அனைத்து நிலையான கொரோனா நடைமுறைகள் ( கள்) பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வகங்களில் முன்னெச்சரிக்கைசுயநிதிக் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகமும் பிராக்டிக்கல் தேர்வுகளை நடத்துவதற்கு முன், ஆய்வகங்களில் உள்ள அனைத்து கருவிகளையும் சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்கள், செமஸ்டர் தேர்வுகளை நேரில் வந்து பங்கேற்கும் முறையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பு உயர்கல்வித் துறையால் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.தேர்வுதட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போன்ற பிற தொழில்நுட்பத் தேர்வுகளும் அட்டவணைப்படி நடைபெறும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசால் வழங்கப்பட்ட அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை பல்கலைக்கழகம்சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இனி ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வு நடைபெறாது என்று ஏற்கனவே கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவில்லை. அதேபோல நவம்பர் மற்றும் டிசம்பரிலும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக நடைபெற்றது.கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள்இப்போது கொரோனா தாக்கம் குறைந்து வகுப்புகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இனி ஆன்லைனிலும், புத்தகத்தை பார்த்து எழுதக் கூடிய வகையிலும் தேர்வுகளை நடத்தப்போவதில்லை என்றும், வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் நேரடியாக மாணவர்களை வரவழைத்துக்கொண்டு முந்தைய காலகட்டங்களில் நடத்தப்பட்ட தேர்வை போலவே நடத்துவதற்கு சென்னை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here