பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி
தகுதியுள்ள பேராசிரியர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு, தகுதியுள்ள பேராசிரியர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தேர்வுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தின் 9-வது துணை வேந்தராக கடந்த 2012ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற ஜேம்ஸ் பிச்சையின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரையிலும் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்காக உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே துணை வேந்தரை தெரிவு செய்வதற்காக முனைவர் எம்.ராஜாராமை ஒருங்கிணைப்பாளராகவும் முனைவர் டி.வேலுசாமி, பேராசிரியர் என்.செந்தாமரை ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.இந்த நிலையில், தகுதியுள்ள பேராசிரியர்கள் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுக் குழு பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி அனுபவம் மிக்க, 67 வயது மிகாத இந்திய குடிமகன்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுய விவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பங்களை நவம்பர் 27-ம் தேதிக்குள் தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இந்த அறிவிப்பை www.b-u.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக