15 உயிர்களை காப்பாற்றிய கல்லூரி மாணவர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

15 உயிர்களை காப்பாற்றிய கல்லூரி மாணவர்

ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது உடைமைகளை இழந்து 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்!

சென்னையிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த ஆம்னி பேருந்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசமானது.  பேருந்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் வயர் கருகும் வாடையை அறிந்து தூங்கிக் கொண்டிருந்த அனைத்து பயணிகளையும் எழுப்பி தப்பிக்க வைத்ததுடன், ஓட்டுனரிடம் விரைந்து சென்று கூறி பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தனது உடைமைகளை இழந்து 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்:
மாணவர் ராம்சுந்தர் ஓட்டுநரிடம் போய் பேருந்து தீப்பற்றி எரிவது குறித்து கூறிவிட்டு, அவரால் மீண்டும் கடைசி இருக்கைக்கு வந்து தனது பை உள்ளிட்ட உடைமைகளை எடுக்க முடியவில்லை. இதில் இவரது படிப்பு தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் பையில் கொண்டுவந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது.

இது குறித்து மாணவர் ராம்சுந்தர் கூறும்போது, எனது பொருட்கள், சான்றிதழ் எரிந்தது குறித்து கவலையில்லை. ஆழ்ந்த நித்திரையில் இருந்து அனைவரையும் ஒரு சேதமும் இல்லாமல் காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர் தக்க சமயத்தில் அவர் உள்ளிட்ட 16 உயிர்களையும் காப்பாற்றியதை பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் வெகுவாகப் பாராட்டினர்.

விருதுநகரில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து பேருந்தில் ஏதேனும் அபாயகரமான தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டுவரப்பட்டனவா என சோதனை நடத்தினர். எரிந்த பேருந்தின் மதிப்பு ரூ.75 லட்சம் என்று ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறர்கள்....

-நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here