எண்ணெய் கிணறுகளை தோண்டி தந்து உதவுமாறு மேற்கத்திய நாடுகளை கேட்டபோது இந்தியாவில் எண்ணெய் வளம் குறைவு இந்தியாவுக்கும் எண்ணெய் வளத்துக்கும் ராசியில்லை. வேண்டுமானால் எங்கள் ' எஸ்ஸோ ' ' பர்மஷெல் ' ' கேல் டெக்ஸ் ' நிறுவங்களிடம் இருந்து வாங்கி கொள்ளுங்கள் என்று தந்திரமாக கைவிரித்து நழுவிவிட்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை தொடர்ந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது அமைச்சர் கே . டி . மாளவியாவை சோவியத் யூனியனுக்கு அனுப்பினார். சோவியத் அரசுடன் பேசி உதவியை உறுதி செய்தார்.
சோவியத் நாட்டின் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பலரும் இந்தியா வந்தனர்.
காம்போ வளைகுடா முதல் காவேரி படுகை வரை. ஹரியானா முதல் அஸ்ஸாம் வரை அலசி ஆராய்ந்தனர்.
அதில் ஒன்று ஜுவாலமுகி என்ற ஒரு இடம் அஸ்ஸாமில் அங்கு ஒரு குகை கோவில் அதன் அழுக்கு தண்ணீர் அருகில் ஒரு பூசாரி . வரிசை வரிசையாக பக்த்தர்கள். அவர்களிடம் தட்சணை , காணிக்கை வாங்கி கொண்டு ' ஓம்' மந்திரத்தை ஓதி ஒரு சூடத்தை கொளுத்தி குழிக்குள் போட்ட உடன் குழியில் இருந்து குப்பென்று தீ ஜுவாலை மேலே எழும்பியது. அக்கினி பகவானை பார்த்தவுடன் பக்த்தர்கள் திரும்புவர். இதுவே அங்கு நெடு நாட்கள் நடந்தது.
அந்த இடத்துக்கு சோவியத் நிபுணர்கள் வந்தனர். பூசரிக்கு காணிக்கை செலுத்தி வரம் வேண்டினர். பூசாரி சூடம் கொளுத்தி போட்டார் தீ ஜுவாலை வெளிப்பட்டது. விஞ்ஞானிகள் புரிந்து விட்டது கோவிலுக்கு வெளியே வந்து சற்று தூரத்தில் பூமியை தொண்டினர் குபு குபு வென்று கச்சா எண்ணெய் பீறிட்டு கொட்டியது.
இவ்வாறே இந்திய எண்ணெய் வளம் கண்டறியப்பட்டது.
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் IOC நிறுவப்பட்டது. இன்று உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் ஒன்று என்று புகழ் பெற்றதற்கு காரணம் சோவியத் சோசலிச குடியரசு அடித்தளம் இட்டதை மறக்க முடியுமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக