தமிழகத்தின் 7 மணி நிலவரம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தின் 7 மணி நிலவரம்

தமிழ் இணைய செய்திககள்

       7 மணி நிலவரம்
            (22/01/2017)

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

     *ஜல்லிகட்டு போராட்டத்திற்கு சென்ற தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழக மாணவர்கள்  அனைவரும் நீக்கம்.

*ஆணவ கொலைகள் அதிகரிப்பு * தமிழகத்தில் ஆணவ கொலைகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப் பட வேண்டும் என இன்று 22.01.17 ஆளுநரை சந்தித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி  மனு அளித்தார்.

*இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 321 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 65, பென் ஸ்டோக்ஸ் 57, பேர்ஸ்டோ 56 ரன்கள் எடுத்துள்ளார். 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து இந்திய அணி களமிறங்க உள்ளது*

*போராட்ட களத்தின் பின்புலத்தில் சில சக்திகள்: தமிழிசை குற்றச்சாட்டு

*புதுக்கோட்டையில் மாடு ஏற்றி சென்ற லாரியை மறித்து போராட்டம்*

*ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேசவிரோத கும்பல்: ஹிப்ஹாப் ஆதி*

*புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் உயிரிழப்பு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்:  திருமாவளவன்*

  *ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆற்காட்டில் மகளுடன் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது*

*கும்பகோணம் அருகே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை பயணிகள் ரயில் நீண்டநோமாக தண்டாவாளத்தில் நிற்கிறது*
  *ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் தமிழ் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நேற்று நடைபெற்றது*

  *ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது*
   *கடந்த ஆண்டு ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில் 31 மாவோயிஸ்டுகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் பொருட்டு தற்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 அரசு ஊழியர்களை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை கொல்ல மாவோயிஸ்டுகள் டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் அருகே ஒத்திகை பார்த்ததாக ஆந்திர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆந்திர போலீசார் முதல்-மந்திரிக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆந்திர போலீசார் கேட்டுக்கொண்டனர்.இதை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை உடனடியாக சந்திரபாபு நாயுடுவிற்கு பாதுகாப்பை அதி கரிக்க உத்தரவிட்டது.  உடனடியாக சந்திரபாபு நாயுடுக்கு கூடுதலாக 4 என்.எஸ்.ஜி ஆயுதப் படைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது*

*ஜல்லிக்கட்டுக்காக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்களுக்கு தலை வணங்குகிறேன் என சென்னை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் எம்.பி. தருண்விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றன என தருண்விஜய் கூறியுள்ளார்*

  *ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மனிதச்சங்கிலியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்*

*ஜல்லிக்கட்டை வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: நாராயணசாமி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here