1. எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ, குழுவோ ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். நடைபெறும் இடம், நேரம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
2. போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகள், நபர்கள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் போட்டியில் கலந்து கொள்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஏற்கனவே பதியப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
3. போட்டி நடக்கும் இடத்தைப் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் அனுமதி தரலாம்.
4. வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் உள்ளடங்கிய ஜல்லிக்கட்டு குழுவை மாவட்ட ஆட்சியர் உருவாக்குவார். ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டப்படி நடப்பதை இந்தக் குழு மேற்பார்வையிடும்.
5. கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் முறைப்படியான பரிசோதனைகளை ஒவ்வொரு மாடும் ஈடுபடுத்தப்படுவதை நிகழ்ச்சி நடத்துநர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊக்க மருந்து கொடுத்தல், எரிச்சலூட்டும் மருந்துகளை உட்புகுத்தல் உள்ளிட்ட எந்த விதமான நடவடிக்கைகளும் எந்த விதத்திலும் மாடுகளின் மீது உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
6. மாடுகள் ஆக்ரோஷம் கொள்ளும் அளவிற்கு எந்தவொரு நோய் தாக்கத்திலும் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
7. திறந்த வெளி மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அங்கே கொண்டு வரப்படுவதற்கு முன்பு மாடுகள் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது ஓய்வில் இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதுர அடி இடத்தில் ஒவ்வொரு மாடும் இருக்க வைக்க வேண்டும். அங்கே அவற்றுக்குத் தேவையான தண்ணீரும், சாப்பாடும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாட்டின் சொந்தக்காரர் அதன் அருகிலேயே இருக்க வேண்டும். கால்நடைப் பராமரிப்புத்துறை மருத்துவர்களின் கண்காணிப்பிலும், காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பிலும் மாடுகள் இருக்க வேண்டும். மாட்டின் உடலில் எவ்விதமான காயங்களும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதனை போட்டியில் அனுமதிக்கக் கூடாது. மழை, வெயிலிலில் இருந்து மாடுகளைப் பாதுகாக்க அந்த காத்திருப்பு இடத்தில் மேற்கூரை இருக்க வேண்டும். சுத்தத்துடன் அந்த இடம் பராமரிக்கப் பட வேண்டும். முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
பரிசோதனைகள் :
1. அனைத்து மாடுகளும் கால்நடைப் பராமரிப்புத்துறை மருத்துவர் மூலம் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
2. அவற்றின் உடல்நலனைப் பரிசோதித்து எதுவும் பிரச்னை என்றால் அவற்றை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.
3. மாட்டிற்கு மது கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால் போட்டியில் அனுமதிக்கக் கூடாது.
4. வாடிவாசல் வரையில் கொண்டு செல்லப்படும் மாடுகளின் மூக்கணாங்கயிறை அதன் சொந்தக்காரர் அவிழ்த்து மாட்டினை போட்டிக்களத்தில் இறங்கச் செய்ய வேண்டும்.
போட்டிக் களம் :
1. குறைந்தபட்ச 50 சதுர அடி பகுதியாக இருக்க வேண்டும். இந்த 50 அடி பகுதிக்குள் தான் மாடுபிடி வீரர்கள் மாட்டினைப் பிடிக்க வேண்டும்.
2. மாடுகள் களத்தில் உள் நுழையும் போது அதன் முன் நிற்க வீரர்களுக்கு அனுமதி இல்லை. வழியை மறித்து நிற்க அனுமதி இல்லை. மாடுகள் வெளியான 30 விநாடிகளுக்குப் பிறகோ அல்லது அவை துள்ளிக் குதிக்க ஆரம்பித்த பிறகு 15 மீட்டர் தொலைவிலேயோ தான் அதனைப்பிடிக்க முயல வேண்டும். கொம்பு, வால் போன்றவற்றை பிடிக்க அனுமதி இல்லை. அவற்றின் கால்களைக் கட்டிப்பிடித்து அதனை நகரவிடாமல் தடுக்கவும் கூடாது. இதனை மீறும் போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். முதல் 15 மீட்டர் தொலைவு தூரத்தில் மெத்தென்ற தளமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாடு ஓடும் பகுதி :
1. மாடு ஓடும் பகுதியில் இரண்டு கட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு அதன் பிறகே பார்வையாளர்கள் 15 மீட்டர் தொலைவில் அனுமதிக்கப்பட வேண்டும். மாடுகள் வெளியாகும் சமயத்தில் கூக்குரலிட்டு அதனை மிரளச் செய்வதற்காக இந்த ஏற்பாடு.
2. 15 மீட்டர் தூரத்தைக் கடந்து ஓடும் இடத்தை மாடு அடைந்தால் அதன் பிறகு அதனை வீரர்கள் தொட அனுமதி இல்லை. குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவிற்கு ஓடி மாடு வெளியாகி விட வேண்டும். மாடு உள்நுழைவதிலிருந்து வெளியாவது வரையிலான நிகழ்வு ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் முடிந்து விட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக