ஓ.பன்னீர்ச்செல்வத்தின் மௌனப்புரட்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஓ.பன்னீர்ச்செல்வத்தின் மௌனப்புரட்சி

இதய தெய்வம் புரட்சித்தலைவி நினைவிடத்திற்கு வந்து மாண்புமிகு அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு, நான் அமைதியாக அமர்ந்தேன். என் மனசாட்சி உந்தப்பட்டதால் நான் இங்கு வந்தேன்.

ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கு சில உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு அம்மாவின் ஆன்மா உந்துதல் கொடுத்தது.

மாண்புமிகு அம்மா அவர்கள் நோய் வாய்ப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டிய போது என்னிடம் வந்து ‘கட்சியும் ஆட்சியும் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது’ என்று அவர்கள் வந்து சந்தித்து கேட்ட போது மாண்புமிகு அம்மா சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாற்று ஏற்பாட்டிற்கு இப்போது என்ன தேவை என்று நான் கேள்வி கேட்டேன். அசாதாரணமன சூழல் நேர்ந்தால் நாம் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு நான் அரை மணி நேரம் அம்மாவின் நிலையைக் கண்டு அழுது புலம்பினேன்.

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்ட போது உடனடியாக பொதுச்செயலாளர் பதவியையும், முதல்வர் பதவியையும் ஏற்று நடத்துவதற்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர்கள் பணித்த போது, அவர்கள் கழக பொதுச்செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்று முதலில் சொன்னார்கள். நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் மறுத்தேன். அம்மா உயிருடன் இருந்த போது இக்கட்டான சூழல் ஏற்பட்ட போது இரண்டு தடவை என்னை நியமித்தார்கள்.

அம்மா இல்லாத நேரத்தில் என்னால் அந்தப் பதவி வேண்டாம் என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் விடாப்பிடியாக ‘உங்களைச் சொன்னால் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இன்னொருவரை சொன்னால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும், கெட்ட பெயர் ஏற்படும்” என்று கேட்ட போது நம்மால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பங்கம் வேண்டாம் என்று ஒப்புக் கொண்டேன்.

முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இரண்டு, மூன்று தினங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சந்தித்து, “திவாகரன் சார் உங்களை கேட்கச் சொன்னார்.. அமைச்சராகி விட்டீர்கள். நான் என் அக்காவை ஊருக்கு கொண்டுச் செல்கிறேன்” என்று சொன்னார் என்றார். “என்ன சொல்கிறீர்கள் விஜயபாஸ்கர்?” என்று கேட்டேன். “அவரை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும்” என்றார்கள்.

நான் மிகவும் யோசித்தேன். அந்த நேரத்தில் சீனியர் அமைச்சர்களையெல்லாம் அழைத்து கருத்து கேட்ட போது அவர்களும் அதனை ஒத்துக் கொண்டு சின்னம்மாவிடம் கருத்தைச் சொல்லி அவரும் ஏற்றுக் கொண்டு பொதுச்செயலாளர் ஆனார்.

அதன் பிறகு நான் முதல்வர் பணியில் அம்மாவின் வழியில் மனதிலே உறுதி ஏற்றுக் கொண்டு செயல் ஆற்றினேன். அப்போது எதிர்பாராவிதமாக வரதா புயல் வந்தது. வரதா அடிச்சுவடே தெரியாமல் 4 தினங்களிலே சரி செய்தோம். அம்மா அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அதனை நான் எனக்காகச் செய்யவில்லை.. அம்மாவின் ஆட்சிக்கு நற்பெயர் வர வேண்டும் என்று செயல்பட்டேன். அது அவர்களுக்கு எரிச்சலை உண்டு செய்தது.

அடுத்து ஆந்திரா சென்று முதல்வர் சந்திரபாபுநாயுடுவைச் சந்தித்து கிருஷ்ணா நதிநீர் கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். அதுவும் மாண்புமிகு அம்மா ஆட்சிக்கு நல்ல பெயர் தந்தது.

அடுத்து ஜல்லிக்கட்டு பிரச்னை.

மாணவர்களும், பொதுமக்களும் மிகப் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி போராடினார்கள்.

காவல்துறையுடன் சேர்ந்து மாணவர்களே சட்டம் ஒழுஙகை சரியாக செய்தார்கள்.

நான் பிரதமரை நேரில் சந்தித்து அவசரச் சட்டத்திற்கு கோரிக்கை வைத்தேன்.

நமக்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய சூழலைத் தான் கட்சியில் சீனியர்கள் செய்ய வேண்டுமே தவிர.. தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தி பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது.

பொதுவாழ்வுக்கு வந்தால் அப்படித்தான் பேசுவார்கள். ஆனால் நம் மனசாட்சிப்படி தான் நடக்க வேண்டும்.

நான் பொறுமையாக தான் இருந்தேன். என்னால் கடுகளவிற்குக் கூட ஆட்சிக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு  எனக்குத் தகவல் இல்லை.

கடல் எண்ணெய் பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து விட்டு, மாண்புமிகு அம்மா வீட்டிற்குச் சென்ற போது அங்கே கழக உறுப்பினர்கள், பொதுச்செயலாளர் குடும்பத்தினரும் இருந்தார்கள். என்னை உட்காரச் சொன்னார்கள்.

அப்போது சின்னம்மாவை முதல்வராக்க எல்லோரும் முடிவெடுத்திருக்கிறோம் என்றார்கள். அதற்கு இப்போது என்ன சூழல் என்று கேட்டேன்.

ஆனால் நீங்கள் அதனை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்குத் தெரியாது. இப்போது என்னிடம் வந்து நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே என்று கேட்டேன்.

வேண்டாம் என்று சொன்ன என்னிடம் முதல்வர் பதவியை வற்புறுத்தி விட்டு இப்போது கீழ்நிலைப்படுத்துகிறீர்களே என்றேன்.

அப்போதும் என் கையைப் பிடித்து நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாக ஆகும் என்றார்கள்.

நான் அம்மா நினைவிடத்தில் சென்று கேட்டு விட்டு வருகிறேன் என்றேன். அதற்கு அப்புறம் போய்க் கொள்ளலாம் என்றார்கள்.

வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக் கொண்டேன்.

அம்மாவின் ஆன்மா இதை மக்களுக்கு தெரியப்படுத்தி விடு என்று சொன்னதால் இப்போது சொல்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒப்புக் கொள்ளும் ஒருவர் தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும். ஒட்டு மொத்த மக்கள் விரும்பும் ஒருவர் தான் முதல்வராக ஆக வேண்டும்.

அது தான் ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்காலத்தின் நலனுக்கு நன்றாக இருக்கும்.

அம்மாவின் பெயரை காப்பாற்றும் ஒருவர் தான் கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் வர வேண்டும்.

இந்தக் கருத்தில் நான் கடைசி வரை உறுதியாக இருப்பேன். போராடுவேன்.


🎙உண்மை நிலைமையை கூறப்போகிறேன் -  பன்னீர்செல்வம்.

🎙ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு என்னை முதலமைச்சராக பதவி ஏற்குமாறு வலியுறுத்திய போது நான் மறுத்தேன்.கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என வலியுறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன்.

🎙ஜெயலலிதாவின் நிலையை கண்டு மருத்துவமனையில் அழுது புலம்பினேன்.

🎙வர்தா புயலில் நான் தீவிரமாக வேலை செய்தது சசிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

🎙செல்லூர் ராஜு, உதயகுமார் மீதும் குற்றச்சாட்டு.

🎙முதல்வராக என்னையை அமரவைத்து கொண்டு அவமானப்படுத்தினார்கள்.

🎙சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பற்றி எனக்கு தகவல் இல்லை.உதயகுமார் பேட்டியை பார்த்து செல்லூர் ராசு என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு மதுரை போய் அவரும் பேட்டி கொடுக்கிறார்.

🎙ராஜினாமா செய்ய ஆளாக்கபட்டேன்.கட்டாயப்படுத்தி கையெழுத்து.

🎙தமிழகத்தை காக்க தன்னந்தனியாக போராடுவேன்.

🎙மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் வாங்குவேன்

🎙ஒட்டுமொத்தத்தையும் போட்டு உடைத்தார் -  *ஓ.பி.எஸ்*.

- முதல்வர் ஓ.பி.எஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here