மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட அரசு ஒப்புதல்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட அரசு ஒப்புதல்!



மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடவும், குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைக்கவும் மத்திய அரசு நேற்று ஜூலை 27ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை பெருக்கத்தாலும் மற்றும் அவற்றின் விளம்பரத்தாலும் அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும் கல்வியின் தரக் குறைபாட்டாலும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. இதனால், பத்தாண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் அரசு பள்ளிகளே மாணவர்களின் கல்வி கற்பதற்கான வாய்ப்பாக இருந்த நிலையில், இன்று பல அரசு பள்ளிகளில் குறைவான மாணவர் சேர்கையால் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, நாடு முழுவதும் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின்கீழ் 2.04 லட்சம் தொடக்கப் பள்ளிகளும், 1.59 லட்சம் உயர் தொடக்கப் பள்ளிகளும் 2015-16ஆம் ஆண்டுவரை தொடங்கப்பட்டன.

இந்த நிலையில், மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகளைப் பகுத்து, ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாநிலங்களுக்காக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஓர் ஆண்டுக்கு முன் பிரதமர் மோடி, பள்ளிக் கல்வித்துறைக்கு கட்டளைகள் பிறப்பித்து இருந்தார். அதன்படி, சில பள்ளிகளை உருவாக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தேவைக்கு அதிகமான இருக்கும் பள்ளிகள், தேவைப்படும் இடங்களில் பள்ளிகள் என பகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

தற்போது, பல மாநிலங்களில் அதிகமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, அருகருகே பள்ளிகள் இருக்கின்றன, இதனால், சில பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமலே செயல்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள். இதனால், பள்ளிகளை கண்காணிப்பதிலும், மேற்பார்வையிடுவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இதைப் போக்கும் வகையிலும் மனிதவளத்தைச் சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள பள்ளிகளை இணைக்க மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here