கல்விக்காகச் சம்பளத்தைக் கொடுத்த அதிபர்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கல்விக்காகச் சம்பளத்தைக் கொடுத்த அதிபர்!



அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது காலாண்டு சம்பளத்தை அந்நாட்டுக் கல்வித்துறைக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பெரும்பான்மையான ஊடகங்களின் கணிப்புகளைத் தகர்த்து அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். பதவியில் அமர்ந்ததிலிருந்து பல திடுக்கிடும் முடிவுகளை ட்ரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார். குறிப்பாக பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, வட கொரியாவுக்கு எதிரான அதிரடி போக்கு, மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டுவதில் முனைப்பு, முஸ்லிம் நாட்டவர்களுக்குத் தடை விதிப்பு என்ற பல அதிர்ச்சிகளை ட்ரம்ப், அவர் பதவி ஏற்றதிலிருந்தே கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர், தனது இரண்டாம் காலாண்டு சம்பளத்தை அமெரிக்கக் கல்வித்துறைக்குக் கொடுத்துவிட்டார். ட்ரம்ப், தனது முதல் காலாண்டு சம்பளத்தையும் நாட்டின் வளர்ச்சிக்காகவே நன்கொடையாகக் கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தக் காலாண்டில் கல்வித்துறைக்கு அதிபர் அவர்கள் தனது சம்பளத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here