சர்வதேச விவகாரங்களில் சீனாவின் குறுக்கீடு அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க அரசு பலமுறை எச்சரிக்கை செய்துவரும் நிலையில், ‘அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டால் சீனா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்தத் தயாராக இருக்கிறோம்’ என்று அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அருகே உள்ள கடற்பகுதியில் அமெரிக்க, ஆஸ்திரேலிய கடற்படைகள் ஒருங்கிணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதை, சீனா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க அரசுக்குத் தகவல் தெரியவந்தது. இந்நிலையில், தென்சீனக் கடல் பகுதி மற்றும் வட கொரியா விவகாரத்திலும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் செயல்புரிந்து வருகிறது.
அதற்கு அமெரிக்க அரசு தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்காவும் தனது போர் கப்பல்களை சீனாவுக்கு எதிராக ரோந்து பணி என்ற பெயரில், தொடர் கண்காணிப்பு வேலையைச் செய்து வருகிறது. இதனால், அமெரிக்காவின் செயல், சீனாவுக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேசப் பாதுகாப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. அதில், அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் கலந்துகொண்டு பேசுகையில், “அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டால், சீனா மீது அணு ஆயுத தாக்குதலை அடுத்த வாரமே நடத்தத் தயாராக இருக்கிறோம். மேலும், அமெரிக்க ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு எதிரிகள் மீது தாக்குதல் நடத்தவும், உயர் அதிகாரிகள் மற்றும் அதிபரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்கவும் உறுதிமொழி எடுத்துள்ளனர்” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக