புதுச்சேரியில் ஆளுங்கட்சியினர் பரிந்துரையின்றி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்ததன்பேரில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாகத் தேர்வுசெய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய நியமன எம்.எல்.ஏ. கடிதத்தை சபாநாயகர் வைத்தியலிங்கத்தை மூன்று பேரும் சந்தித்துக் கொடுத்து, ‘எங்களுக்குச் சட்டமன்றத்தில் இருக்கைகளும், அலுவலகமும் வழங்க வேண்டும்’ என்று கூறினார்கள். இந்நிலையில், சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் நேற்று, ஜூலை 27ஆம் தேதி மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் தனித்தனியாக அனுப்பிய கடிதத்தில், ‘உங்களுக்குச் சட்டமன்றத்தில் இருக்கை வழங்க முடியாது. அலுவலகம் ஒதுக்க முடியாது. நியமன எம்.எல்.ஏ-க்களுக்கான சான்றுகளோ, ஆவணங்களோ சரியானதாக இல்லை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக