நடப்பு நிதியாண்டில் குடியிருப்பு வீடுகளின் விற்பனை 4 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வீடுகளின் விற்பனை 4 சதவிகிதம் குறைந்துள்ளதாக proptiger.com இணையதளத்தின் தகவல் தெரிவிக்கிறது.
இந்த இணையதளம் நாட்டின் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் நிலை பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் சென்னை, மும்பை, புனே, நொய்டா, குருக்ராம், பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய ஒன்பது முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் பற்றிய நிலவரங்களைக் கண்காணித்து தகவல் வெளியிட்டுள்ளது.
இத்தகவல் அறிக்கையில், “2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒன்பது நகரங்களில் 53,352 வீடுகள் விற்பனையாகியுள்ளன. முந்தைய காலாண்டில் குடியிருப்பு வீடுகளின் விற்பனை 3 சதவிகிதம் உயர்ந்தது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 55,500 வீடுகள் விற்பனையாகின. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றையும் தாண்டி நடப்பு நிதியாண்டில் வீடுகளின் விற்பனை 4 சதவிகிதம்தான் சரிந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக