சங்கமித்ரா கதாபாத்திரத்தில் ஓவியா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சங்கமித்ரா கதாபாத்திரத்தில் ஓவியா?


‘களவாணி’ படம் 2010ஆம் ஆண்டு வெளியாகி பரவலாக பலரின் கவனத்தையும் பெற்றது. அந்தப் படத்தில் அறிமுகமான ஓவியா தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் முன்னணி கதாநாயகி பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. விமல், சிவா, கதிர், சிவகார்த்திகேயன் (முதல் படம்) தவிர மற்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அவர் பெறவில்லை. அதன்பின் தொடர்ச்சியாக அவருக்குக் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரது திரையுலக வாழ்க்கையிலேயே மிகப் பெரிய திருப்பமாக அமைந்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் அணுகுமுறை, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ஆகியவை அவருக்குத் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துக்கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் ஓவியாவைப் பிடித்துபோய் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து அவர் எப்போது வெளியேறுகிறாரோ அப்போது பல படங்களில் ஒப்பந்தமாவார் என திரையுலகில் பலரும் பேசிக்கொண்டிருக்கும்போது ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசன் விலகியதை அடுத்து எந்த கதாநாயகி பொருத்தமானவராக இருப்பார் என BehindWoods இணையதளம் ட்விட்டர் பக்கத்தில் மக்களின் கருத்தைக் கேட்டிருந்தது. அதற்கு ஓவியாதான் சங்கமித்ராவுக்குப் பொருத்தமானவர் என 55% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here