தமிழ் திரைக்கு 'நோ" தெலுங்குக்கு 'ஆமாம்' போடும் நடிகை . - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் திரைக்கு 'நோ" தெலுங்குக்கு 'ஆமாம்' போடும் நடிகை .


10 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘ரெண்டு’ திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுஷ்கா. அதன்பின்னர் தமிழில் முன்னணி கதாநாயகியாக பெரிய ரவுண்டு வருவோம் என்று காத்திருந்தவருக்கு குட்பை கூறி அனுப்பியது கோடம்பாக்கம். இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் நாகார்ஜூனாவுக்கு யோகா கற்றுக்கொடுக்க வந்த அனுஷ்கா, அவருடைய அறிவுரைப்படி தெலுங்கு சினிமாவில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார். ‘அருந்ததீ’, ‘பஞ்சமி’ என்று ஹீரோயின் ஓரியன்டட் படங்களில் நடித்துவந்த அனுஷ்காவை, விஜயசாந்தியின் நாற்காலியில் அமரவைத்து அழகுபார்த்தது ‘அக்கடபூமி’. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டரில் மட்டும் நடிக்காமல் அவ்வப்போது விசா எடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று விஜய், சூர்யா, கார்த்தி, ஆர்யாவுடன் ரிலாக்ஸாக டூயட் பாடித் திரிந்தார் அனுஷ்கா. ‘பாகுபலி’ வெளிவந்த பிறகு அனுஷ்காவின் திரைப்பட வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. யோகா டீச்சராக உலவிய அனுஷ்காவை, உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் மகாராணியாகப் படம்பிடித்துக்காட்டியது ‘பாகுபலி’.

முன்பெல்லாம் தேடிவரும் எல்லா படங்களையும் தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டு நடித்த அனுஷ்கா, ராஜமெளலியின் ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, எந்தப் புதுப்படத்துக்கும் எளிதில் கால்ஷிட் தராமல் தவிர்த்து வந்தார். அதுமட்டுமல்ல... பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு புதுப்படத்தில் நடிப்பதற்கு 4 கோடி ரூபாய் என்று சம்பளத்தை உயர்த்திக்கொண்டார். ‘இனிமேல் கெளரவத் தோற்றத்தில் நடிக்க மாட்டேன்’ என்று அனுஷ்கா இருந்த விரதத்தை 2 கோடி ரூபாய் உலுக்கி உடைத்துப்போட்டது. ‘பாரத் அனே நேனு’ படத்தில் மகேஷ்பாபுடன் நடிக்கும் ஒரு குத்தாட்டப் பாடலுக்குத்தான் 2 கோடி சம்பளம். தெலுங்கு சினிமாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவதைப்போல, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தால் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்டால், ‘மகேஷ்பாபு எனக்கு நல்ல நண்பர். ஒரு பாட்டுக்கு நடிக்க அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. இனிமேல் வேறு எந்த மொழிப் படங்களிலும் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு டான்ஸ் ஆட மாட்டேன்’ என்று விளக்கம் தருகிறார் அனுஷ்கா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here