தீவிரவாதத்துக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதோடு, தீவிரவாதிகளுக்கு தங்கள் நாட்டில் பாதுகாப்பும் வழங்கி வரும் பாகிஸ்தான் நாட்டுக்கு, அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவியை ரத்து செய்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீவிரவாதம் குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று ஜூலை 21ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நாடுகள் லிஸ்டில் ஏற்கனவே ஈராக், ஏமன், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் இருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகநாடுகளில் பல்வேறு நாடுகளுக்குப் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. அவைகளில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மிக அதிகளவில் அமெரிக்க அரசு நிதியுதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டுக்குழு கூட்டத்தில், பாகிஸ்தான் நாட்டுக்கு நிதி வழங்கப்படுவதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ள டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. அதையடுத்து, ஹக்கானி நெட்வோர்க் பயங்கரவாத இயக்கத்தின்மீது பாகிஸ்தான் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ. 23 லட்சம் கோடி மதிப்பிலான 350 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை நிறுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக