பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! பயங்கரவாதம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா தன்னு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! பயங்கரவாதம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா தன்னு


பயங்கரவாதம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சீனா தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு முதல்முறையாக டொனால்டு டிரம்ப் தொலைக்காட்சியில் உரையாற்றினார். டிரம்ப் பேசுகையில், பயங்கரவாதத்தாலும், தீவிரவாதத்தாலும் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாளிலும் மக்களைக் கொன்று குவித்து வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கும் புகலிடமும் தந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல்லாயிரம் கோடி கணிக்கில் நிதியுதவி அளிக்கிறது. அதே நேரத்தில் நாம் யாரை எதிர்த்துச் சண்டையிட்டு வருகிறோமோ, அவர்களுக்கு சொர்க்கபூமியாகவும் உள்ளது.எனவே, இதில் மாற்றம் வேண்டும்.

அமெரிக்க படைவீரர்களையும், அதிகாரிகளையும் இலக்காகக் கொள்கிற பயங்கரவாதிகளையும், போராளிகளையும் பாதுகாக்கிற நாட்டுடனான நட்புறவு தொடர முடியாது.

தாலிபான் மற்றும் இன்னும் பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாகத் திகழ்ந்துகொண்டிருந்தால், இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவரும். ஆப்கானிஸ்தானில் மீண்டும் படையின் எண்ணிக்கையையும் அமெரிக்கா உயர்த்துவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து நிலை நட்பு நாடாகக் கருதும் சீனா, அந்நாட்டிற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தொடர்பான டொனால்டு டிரம்பின் பேச்சு குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூவா சாங்யிங் கூறுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் எண்ணற்ற தியாகங்களை செய்து உள்ளது, அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பாகிஸ்தான் முக்கியப் பங்களிப்பைக் கொடுத்துவருகிறது என்று அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here