மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள்! மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர்Dr. கிருஷ்ணசாமி ......... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள்! மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர்Dr. கிருஷ்ணசாமி .........


மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் நிலை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு மத்திய அரசு நீட் தேர்வைக் கட்டாயமாக்கியது. தமிழக அரசு மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவசர சட்டம் மூலம் இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு அளிப்பதாக ஒப்புதல் அளித்தது. இருப்பினும், நீட் தேர்வு முறைப்படியே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று (ஆகஸ்ட் 21) வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசினுடைய மாநில பாடத்திட்டத்தில் கிராமப்புற பள்ளிகள் மட்டுமின்றி நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் இயங்கக்கூடிய அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்? என்றப் பட்டியலை மாவட்ட வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் புறநகர் பகுதிகளில் எவ்வளவு பேர், நகர், மாநகர் பகுதிகளில் எவ்வளவு பேர் என்றப் பட்டியலை வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் மக்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணசாமி மேலும் தனது அறிக்கையில், "ஒரு ஆண்டுக்கு தமிழகத்தினுடைய பட்ஜெட்டில் 25% கல்விக்காக மாநில அரசு ஒதுக்குகிறது. அப்படி கல்விக்காக ஒதுக்கப்படக் கூடிய அந்தப் பள்ளிகளில், அதாவது தமிழக அரசினுடைய மாநிலப் பாடத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய ஏழை, எளிய, கிராமப்புற, நகர்புற மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் நுழைய முடிகிறது என்பதை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக தமிழக மக்களுக்கு சமர்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் நீட் தேர்வு மற்றும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டால் ஏற்படும் ஆபத்து பற்றி கூறுகையில், "நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்ட தவறான புள்ளி விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது எந்த விதத்திலும் சரியாக இருக்காது. மேலும், இப்போது எழுந்துள்ள புதிய கருத்தின்படி, நீட் தேர்வினுடைய அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியலை தயார் செய்து, மாநிலப் பாடத்திட்டத்தின் கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியலை தயார் செய்து, இருவருக்கும் இடம் அளிப்பது என்று சொன்னால் இன்னும் 2500 அல்லது 3000 இடங்களை கேட்கக்கூடும். அது மிகப்பெரிய தவறாக முடியும். ஏற்கெனவே தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் கட்டுமானங்களும் இல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலேயும் மருத்துவக் கல்லூரிகளை துவக்குகின்ற காரணத்தினால் அங்கு படிக்கக்கூடிய மாணவர்களின் தரம் நகரத்தில் இருக்கக்கூடிய பெரிய மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தரத்திற்கு ஒப்பாக இருப்பதில்லை. கூடுதலாக மாணவர் நடைபெறுமேயானால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். நோயாளிகள் விகிதம் குறைவாகும். இதனால், மோசமான மருத்துவர்களே உருவாவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here